(146)
அப்பாத்துரையம் – 13
துளிகளும் விட்டுச் சென்றது. கடுகு சிறுத்தால் காரம் பெருகும் என்ற முறை யில், பகமனிப் பேரரசு சிதறியபின் அதன் துண்டுகள் வடதிசைப் புயலாட்சிக் கனவே காணத் தொடங்கின. சிற்பிகளின் மரபில் மூன்றாவது சிற்பியென விளங்கிய முதல் துளுவப் பேரரசன் ஆட்சி முடிவுற்ற சமயம் அப்புயற் கனவு வேதாளமாகச் சீறிப் புறப்பட்டது. ஆனால் சிற்பிகள் மரபில் வந்த செம்மலான பேரரசன் கிருட்டிண தேவராயன் கையில் வேதாளம் சிறகிழந்து, நகமிழந்து, உயிர் தப்பினால் போதுமென்று ஓட நேர்ந்தது.
சதியைத் துணைக்கழைத்தே தென்னகப் புயலெழுப்பி வேதாளம் நெடுநாளைக்குப் பின் தற்காலிக வெற்றி கண்டது. ஆனால் இதனால் புயலின் துளியான குட்டி வேதாளம் பின்னால் வரும் பெரும்புயல் வேதாளத்திற்குத்தான் இரையாக நேர்ந்தது. அதையும் அப்பெரும்புயல் வேதாளத்தையும் புயலையும் விழுங்கித் தென்னகத் தேசீயம் அவ்வாற்றல்களைத் தென்றற் புதுப் பொங்கல் ஆற்றலாக மாற்றும்நாள் தொலைவில் இல்லை.
க
வண்டூது மாமலரின் மென்னயமும் வண்தரளம்
கண்டூது வெவ்வேலை தடிந்தெழும்வல் ஆற்றலும்மேற் கொண்டூது தேசீயத்தின் உயிரார்வக் கொழுந்தெழுப்பும் பண்டூது விட்டவெற்றிப் பண்பரசர் வாழியவே!
திட்டமிட்ட சட்டதிட்டம் கட்டமைத்துத் தெவ்வேந்தர் கட்டுதிட்டம் வட்டமிட்டுக் கட்டழித்துக் காடுபுயல் வட்டணைத்துத் தொட்டுவளம் தேக்கியவண் மாமன்னர் கட்டளைகட் டங்கிவளர் கன்னிநிலம் வாழியே!
கண்ணப் பெரியெழ மண்மாரிதூவும் கடும்புயல்முன் எண்ணப் புயல்நீர் எழில்மாரிபெய்தவ் எரியடக்கும் பண்ணப் பணைத்த பெரும்பேரரசர் பரிசின்வந்த வண்ணப் பணைத்தோட் கிருட்டிணராயமால் வாழியவே!
சிற்பிகள் மரபின் முதற் செல்வக் கொழுந்து
தேசீயச் சிற்பிகள் இருவரின் ஆட்சிகளைப் போலவே அவர்கள் மரபின் முதற் செல்வக் கொழுந்தாகிய வீர நரசிம்மன்