பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

(151

வீரர், தொழிலாளர், குடியானவர், பெருமக்கள் ஆகிய எல்லா வகுப்புக்களிலுமே உரிமைபற்றிய சச்சரவுகளை அதற்குரியவர்கள் தாமே பேரரசர் முன்னிலையில் மற்போர் செய்து தீர்த்துக்கொள்வதே கண்ணியமான முறையாக்கப்பட்டது. வாள்போர், சிலம்பம் ஆகிய வீரர் கேளிக்கைகளுக்குப் பேரரசன் நாடெங்கும் ஊக்கமளித்தான். அவற்றில் சிறப்புப் பெற்றவர்க்குத் தக்க பரிசில்களுடன் பேரழகிகளை மணம் செய்வித்து வீரத்துக்கும், அழகுக்கும் ஒருங்கே மதிப்பளித்தான். தென்னகத்தின் வீர மரபைக் கதையாக்கிவிடாமல் செயலாக்கி வளர்த்த பெருமை வீரநரசிம்மனுக்கு உரியது.

மக்கள் ஒழுக்க முறையிலேயே பேரரசன் ஒரு புரட்சி உண்டு பண்ணினான். கோழைத்தனமே பெருங்குற்றமாகவும், மிகவும் கீழான அவமதிப்புக்குரிய பண்பாகவும், அவன் தென்னக மக்கள் சமுதாயம் எண்ணும்படி செய்தான்!

இம்முறைகளினால் நிலைப்படைகளல்லாது எந்நேரத்திலும் லட்சம் வீரர் படை

பேரரசில் மூன்று அல்லது நான்கு திரட்டப்படத் தக்க நிலை ஏற்பட்டது.

ஆட்சியின் அரங்கங்களின் சிறுசிறு நுணுக்கங்களில்கூடப் பேரரசன் கண்ணோட்டம் செலுத்தினான். குடிகள் எவர் குறையையும் கேட்டுத் தன்னாலியன்றவரை உடனடியாக அல்லது விரைந்த தீர்ப்புக்கள் காணலும், மக்கள் துன்பங்குறைக்கவும் அவன் தன் முழுச்சிந்தனையும் செலுத்தினான். இதற்கு முன்பு எந்தப் பழங்காலப் பேரரசர் காலத்திலும் நாம் கேள்விப்படாத முறையில் அரசியல் குறைகளை நீக்க மக்கள் கிளர்ச்சி இயக்கம் நடத்திய செயலை வீரநரசிம்மன் ஆட்சியிலேயே நாம் கேள்விப்படுகிறோம். திருமண மக்களுக்கான வரியை எதிர்த்து நடைபெற்ற இயக்கம் அவன் நாட்களிலேயே தொடங்கிய தென்று அறிகிறோம்.

கோட்பாட்டு முறையில் குடியாட்சி நிலவுவதாகக் கூறப்படும் இந்நாட்களில் கிளர்ச்சிகள் நடத்துவது எளிது. ஆனால் தற்காலம் குடியாட்சியால் மக்கள் குரல் கட்சிக் குரல்களாகப் பிரிவுறுவதாலும், ஆட்சிப் பொறுப்பு மக்களுக்கு எட்டாத மையத் துறைக்குக் கொண்டு செல்லப்படுவதாலும், அது ‘துறை துறையாகப் பிரிக்கப்பட்டுச் சிதறிப் போவதால்