154
அப்பாத்துரையம் – 13
பீடாரிலிருந்து வந்த ஊர்வலப் படைகளுக்குப் பெயரளவில் பகமனிப் பேரரசனாயிருந்த இரண்டாம் முகமதுஷா தலைவனா யிருந்தான். அவனுடன் மாலிக் அகமது பஃரி படைத் தலைவனாகப் பணியாற்றினான். தவிர பீசப்பூர் அரசன் ஆதில்கான், பேரர் அரசன் இமத் உல் முல்க், கோல் கொண்டாத் தலைவன் குதுப் உல்முல்க், மீர்சாலுதுப் உல்லா, நூரிகான், குவாஜா ஸீஜஹான் ஆகிய அரசர்களும், படைத் தலைவர்களும் உடனிருந்தனர். மாமூது இஸ்லாமியப் படைகளின் நடுஅணித் தலைமையையும், குதுப் உல் முல்க் அதன் வலப்புற அணியின் தலைமையையும் ஏற்றிருந்தனர். இடப்புற அணியின் இரண்டு பிரிவுகள் மாலிக் அகமது பஃரி தலைமையிலும் மற்றொரு பக்கப்பிரிவு ஆதில்கான் தலைமையிலும் வீறிட்டு நின்றன. விசயநகரப் படைகளும் இதற்கேற்ப மூவணிகளாக
வகுக்கப்பட்டிருந்தன.
போர்த் தொடக்கத்தில் குதுப் உல்முல்கின் இஸ்லாமிய வலப்புற அணிகள் விசயநகர இடப்புற அணிகளைத் தகர்த்தன. ஆயினும் விசயநகரப் பேரரசரின் நடு அணித்தாக்குதலால் முகமது ஷாவின் ஒரு படையணி சிதைந்து பின்வாங்கிற்று. தனுடன் முஸ்லீம் அணிகள் முழுவதுமே விசயநகர அணிகளின் ஒன்றுபட்ட மோதுதலால் உடை பெற்றன. அத்துடன் முன்னேறி வந்த பீசப்பூர் அரசன் ஆதில்கான் தன் படைகளின் சீர்குலைவால் தனிப்படத் துண்டிக்கப்பட்டான். இச்சிக்கலிலிருந்து விடுபடும் முயற்சி யிடையே அவன் குதிரையே அவனைக் கீழே தள்ளி மிதித்துத் துவட்டிவிட இருந்தது. விசயநகரத் தலைவர்களுள் ஒருவனான சாளுவதிம்மன் குதிரைக் காலில் ஒண்டியிருந்த காலனிடமிருந்து அவனைக் காத்து அவனுக்கு விசயநகரத்தின் பெருந்தன்மையைக் காட்டி உயிர்ப்பிச்சை அளித்தான் என்று கூறப்படுகிறது.
தம் அரசன் நெருக்கடி நிலை கண்ட சில பீசப்பூர் பெருமக்கள் அவனை மீர்ஜா லுத்புதீனிவர்களின் கூடாரத்துக்குக் கொண்டு சென்று மருத்துவம் செய்தனர். அவன் காயங்கள் ஆற நாட்கள் பிடித்தன. ஆனால் அதற்குள் படைகளும் கூடாரமும் ஓட்டம் எடுக்க வேண்டியதாயிற்று.விசயநகரப் படைகள் எதிரிகள் மூச்சுவிட முடியாதபடி அவற்றின் ஓட்டத்தைத் தொடர்ந்து