வெற்றித் திருநகர்
(155
சென்று போரிட்டன. பீசப்பூர் எல்லை சென்றபின் ஆதில்கான் எதிர்த்து நின்று கோவில்கொண்டா போரில் மீண்டும் தோல்வியுற்று மாண்டான். கோவில்கொண்டாக் கோட்டையும் கிருட்டிண தேவராயன் கைவசப்பட்டது.
இப்போரினால் பேரரசன் கிருட்டிண தேவராயன் இஸ்லாமிய அரசுகளின் புயல் மரபில் வந்த கோழைத்தனமான திட்டத்துக்கு ஒரு சவுக்கடி கொடுத்தான். அவர்கள் அழிவு வெறி குழப்ப வெறியாயிற்று. கிலியூட்டி ஓடுபவர்களைத் துரத்திச் செல்வது. ஆயுதமேந்தாத பொதுமக்களையும் பெண்டிரையும் குழந்தைகளையும் கொன்று குவிப்பது என்பதையே வீரமாகக் கொண்டிருந்த புயல் மரபு இப்போரில் பெற்ற அதிர்ச்சியை அது நெடுநாள் மறக்க முடியவில்லை. "வெற்றியும் கொள்ளையும் நாடி வந்த பெருமக்கள் இப்போது தங்கள் போர்க் கம்பளங்களை மடித் தெடுத்துக் கொண்டு பீடாரிலேயே சென்று படுக்க விரைந்தோடினர்” என்று விசயநகரக் கல்வெட்டுக்கள் அவர்கள் நிலையைப் பெருமித நகைச்சுவைபட விரித்துரைக்கின்றன.
சேரன் செங்குட்டுவனும் பாண்டியரும் சோழரும் பின் பற்றிய வீரப் பரணியின் முதல் எதிரொலியை நாம் இவ்விசயநகரப் பேரரசனின் பெரும் போரிலே காண்கிறோம். ஆனால் தமிழ் மரபின் வீறினை நாம் போர் வெற்றியில் மட்டுமல்ல, அதன் பின்னணி அரசியல் நிகழ்ச்சிகளிலும் காண்கிறோம். தீவானிப் போர், கோவில் கொண்டாப் போர் ஆகியவை தொடங்குமுன்பே, போர்ச்சுக்கீசியத் தலைவர்கள் பேரரசனுக்கு ஓர் அவசரத் தூதனுப்பியிருந்தனர். முன் ஆட்சியில் கோரியபடி பட்கல் துறைமுகத்தில் கோட்டை கட்டிக் கொள்ள
ணக்கம் தெரிவிப்பதானால், போரில் உதவுவதுடன் குதிரை வாணிகத் தொடர்பை முற்றிலும் விசய நகரப் பேரரசனுக்கே உரிமைப்படுத்துவதாகவும் வாக்களித்திருந்தனர். பேரரசன் அவர்கள் உதவியின் அருமையையும் குதிரை வாணிகத்தின் அருமையையும் அறிந்தவன். ஆயினும் அவன் அவர்கள் தூதை ஏற்கவோ மறுக்கவோ செய்யவில்லை. அவர்கள் உதவி யில்லாமலே போரில் வெற்றிபெற்றுத் தன் பேரரசின் மதிப்பையும் வீறினையும் உயர்வுபடுத்திக் காட்டினான். போர்ச்சுக்கீசியரும் பேரரசன் பெருங் குறிப்பறிந்து இஸ்லாமிய அரசனிட மிருந்து