பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

157

சிவசமுத்திரத்துக்குப் பதிலாகச் சீரங்கப்பட்டினம் தலைமை யிடமாக்கப்பட்டு, ஒரு புது மாகாணம் வகுக்கப்பெற்றது. சிக்கராயனுடன் செம்ப கெளடன், வீரப்ப கெளடன் ஆகியோர் அதன் ஆட்சியாளராக்கப்பட்டனர்.

உம்மாத்தூர் போர் இரண்டு

ஆண்டுகளிலேயே முடிந்தாலும் அது ஒரு நாளைக்குள் முற்றுவிக்கப்பட்டு விட்டதாகக் கவிஞர் மரபு விதந்துரைக்கின்றது.

சாளுவ நரசிம்மனின் இரெய்ச்சூர்-உதயகிரி குரலின் ஒரு பாதியான உதயகிரி இன்னும் மீட்கப்படாமலே இருந்தது. சிற்பிகள் காலத்து உம்மாத்தூர்த் தோல்வி துடைத்தபின், சிற்பிகளின் மரபுக்குரிய கதிரிளங்கொழுந்தாகிய கிருட்டிண தேவராயன் மீண்டும் வடகிழக்குத் திசை நோக்கினான். கசபதி பிரதாபருத்திரன் ஆட்சி இன்னும் ஒரிசா முதல் நெல்லூர் வரை இராசமகேந்திரவரம், கொண்டவீடு, வாரங்கல் முதலிய பரப்புகள் முழுவதும் அடக்கியதாகவே இருந்தது. கிருட்டிண தேவராயன் உதயகிரிக் கோட்டை மீது தாக்குதல் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் அதன் முற்றுகையை இடைவிடாது தொடர்ந்தான். முற்றுகை மிகவும் கடுமுயற்சியாகவே இருந்தது. வெல்ல முடியாததாக, நுழைய முடியாததாகக் கருதப்பட்ட அக்கோட்டைக்குள் செல்லப் பேரரசப் படைகள் மலைகளும் பள்ளத்தாக்குகளும் வெட்டிக் குடைந்து புதுப் பாதைகளிடம் வேண்டியதாயிருந்தது. இது முடிந்தபின் கோட்டை பிடிபட்டது.

முன்னாட்களில் தமிழகப் பல்லவப் பேரரசன் வாதாபி

வென்றபோது வெற்றிச் சின்னமாகத் தமிழகத்துக்கு வாதாபி கணபதிச்சிலை கொண்டுவந்து அப்புதிய தெய்வத்தின் வணக்கத்தையும் தமிழகத்தின் தேசீய வணக்க முறையாக்கினான் என்று அறிகிறோம். சோழப் பெரும் பேரரசன் இராசராசன் சேரனை வென்றபோது இதுபோலவே அந்நாட்டின் மரகதவினாயகரைத் திருப்பூவனத்தில் கொண்டு வந்து நிறுவியதாக அறிகிறோம். இதே தமிழ் மரபுகளை நினைவூட்டும் வகையில் கிருட்டிண தேவராயன் உதயகிரிக்கோட்டை வெற்றியின் சின்னமாக அங்குள்ள ஒரு கண்ணன் சிலையைக் கொண்டுவந்து வெற்றித் திருநகரில் நிறுவி, அதற்குப்