பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

அப்பாத்துரையம் – 13

இதே நயமுடைய மற்றோர் அழகிய பாடலும் “பெருந் தொகை” என்ற பாடல்திரட்டு மூலம் நம் கை வந்துள்ளது.

படைமயக் குற்றபோதும் படைமடம் ஒன்றிலாதான்

மடைசெறி கடகத்தோளான் மதிக்குடை மன்னர்மன்னன் கெடிமன்னர் வணங்கும் தாளாண் கிருட்டிண ராயன் கைபோல் கொடைமடம் என்பதம்ம, வரையாது கொடுத்தலாமே!

என்று "கடகம்" இதிலும் சிலேடையாக வழங்கப் பெற்றுள்ளது. தவிர கொடை மடத்துக்கே இங்கே கிருட்டிண ராயன் கைக்கொண்ட இலக்கியமாகக் குறிக்கப்பட்டுள்ளது. சிம்மாத்திரி அல்லது சிம்மாசலத்தில் கிருட்டிணராயன் வெற்றித்தூண் நாட்டியது வட கூவத்துக் கோயில் கொண்ட பெருமாள் செயல் என்று ஒரு பக்தி மிக்க புலவர் பாடியுள்ளார்.

கிரிபோல் விளங்கிக் கிளரும் புயக் கிருட்டிணராயர்

தரைமீது சிம்மாத்திரியில் சயத்தம்ப நாட்ட

வரமாதர வாலளித்தே வடகூவ மேவும்

கருமாமணி வண்ணனைநீடு கருத்துள் வைப்பாம்!

ஸ்லாமிய மரபின் காவலன்

தேசீயச் சிற்பிகளின் உம்மாத்தூர்த் தோல்வியின் கறையைத் துடைத்து அச்சிற்பிகளது இரெய்ச்சூர் உதயகிரிக் குரலைக் கிருட்டிண தேவராயர் கன்னிப்போரும் கங்க கலிங்க வெற்றிகளும் நிறை வேற்றியிருந்தன. ஆனால் கங்க கலிங்கப் போர்களில் ஈடுபட்டிருந்த சமயம் பார்த்து பீசப்பூர் அரசன் இஸ்மாயில் ஆதில்கான் (1510-1534) இரெய்ச்சூரை மீண்டும் கைப்பற்றி யிருந்தான். கலிங்கப் போர் முடிவுற்ற பின் 1520-இல் கிருட்டிண தேவராயன் அதை மீட்க ஒரு பெரும்போர் நடத்தினான். இது கிருட்டிணை ஆற்றுப்போர் அல்லது இரெய்ச்சூர் போர் என்ற பெயரால் வரலாற்றில் புகழ் பெற்றுள்ளது. இப்போர்க்களத்தைக் கண்கூடாகக் கண்டு போர்ச்சுக்கீசிய வரலாற்றாசிரியர் நூனிஸ் அதுபற்றிய விவரங்கள் குறித்துள்ளார். இதில் விசயநகரப் படைகளில் காலாள் வீரர் துணைவர் உட்படப் பத்து இலட்சமும் யானைகள் 550-ம்