பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

அப்பாத்துரையம் – 13

க்கிளர்ச்சிகளை அடக்க விசயநகரப் படைத் தலைவர்கள் வையப்ப நாயகன், துப்பாக்கி கிருட்டிணப்ப நாயகன், வெங்கடப்ப நாயகன் ஆகிய மூவர் அனுப்பப்பட்டிருந்தார்கள். அவர்களுடன் நூறாயிரம் போர்வீரரடங்கிய பெரும்படையும் ஈடுபட்டிருந்தது. கிளர்ச்சிகள் முற்றிலும் அடக்கப்பட்ட பின் தமிழகம் மூன்று மண்டலங்களாக வகுக்கப் பட்டது. வடக்கே வேலூர் முதல் தெற்கே கொள்ளிடம் வரையுள்ள பகுதி வடமண்டல மாக்கப்பட்டு, அதில் செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு துப்பாக்கி கிருட்டிணப்ப நாயகன் மண்டலத் தலைவனானான். காவேரிக் கரைப்பகுதி முழுவதும் ஒரு மண்டலமாகக் கொண்டு தஞ்சையிலிருந்து விஜயராகவ நாயகன் ஆண்டான். தென் கோடிப் பகுதியில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு வெங்கடப்ப நாயகன் மண்டலத் தலைவனானான்.

இப்பிரிவுகளே மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக மரபுகளுக்கு

அடிகோலின.

விசயநகர மரபின் வடகோடித் தேசீயக் கொழுந்தான சிவாஜி நாட்களில் வேலூரும், செஞ்சியும் அவன் தென் திசைத் தலைநகர்களாகவும் தஞ்சை அவன் தந்தைவழிவந்த உடன் பிறந்தாரின் மராத்திய அரச மரபாகவும் வளர்ந்தன. மதுரை ஒன்றே முழுத் தேசீய மரபாக ஒளிவீசி நின்றது.

மதுரை நாயக மரபு

கிருட்டிண தேவராயன் ஆட்சியின் இறுதிப் பகுதியில் 1525- ல் தமிழகத்தின் அரசியல் வாழ்வில் மீண்டும் கலங்கல் ஏற்பட்டது. இதுபற்றிய வரலாற்றாதாரங்கள் தெளிவு படவில்லையானாலும், தெலுங்கில் எழுதப்பட்டு, அந்நாளிலிருந்து மக்களிடையே வழங்கி வந்த வரலாற்றுச் சார்பான இலக்கிய ஏடுகள் நிகழ்ச்சிகளைச் சிறு வீரகாப்பியமாக்கியுள்ளன.

தமிழகத்தில் விசயநகர ஆட்சிக்கால முழுவதும் நாம் பெரும்பாலும் பாண்டிய மரபினரைப் பற்றியே கேள்விப்படு கிறோம். சோழ மரபினரைப்பற்றி மிகுதி செய்தி தெரிய வரவில்லை. ஆனால் அம்மரபினர் நீடித்துத் தொடர்ந்ததுடன் அவ்வப்போது தம் ஆற்றல் பெருக்கியும் வந்தனர் என்று தோற்றுகிறது. கிருட்டிண தேவராயன் ஆட்சியின் இறுதி