பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

165

நாட்களில் வீரசோழன் என்ற சோழ மன்னன் தன்னாட்டில் வலிமை பெற்றிருந்ததுடன் பாண்டியன் மீது படை யெடுத்து அவனைத் துரத்திவிட்டு நாடு கைக்கொண்டான். நாடிழந்த சந்திரசேகரன் என்ற பாண்டியன் முறையீட்டின் மீது பேரரசன் கிருட்டிண தேவராயன் நாகம நாயகன் என்ற தலைவனைப் பாண்டியனுக்குதவுமாறு அனுப்பினான்.

நாகம நாயகன் முதல் தேசீயச் சிற்பியான சாளுவ நரசிம்மனிடம் நரசநாயகனைப் போலவே அவனுக்கு உற்ற துணைவனாயிருந்தவன். வீரநரசிம்மன் ஆட்சி கடந்து கிருட்டிண தேவராயன் ஆட்சியிலும் அவன் 'கோடியன்' அல்லது சேமப்பொருள் காவலனாகவும், 'தோசேகானா' அல்லது வரிதண்டலாளனாகவும் மைய அரசிலேயே பணியாற்றி வந்தான். தமிழக முறையீட்டின் பயனாக அவன் மதுரை மண்டலத் தலைவனாக அனுப்பப்பட்டான். அவன் சோழனை அ க்கிப்

பாண்டிய நாட்டை மீட்டுவிட்டான். ஆனால் எக்காரணத்தாலோ மீட்ட நாட்டை அதன் உரிமையாளனிடம் ஒப்படைக்காமல் அவன் காலந்தாழ்த்தி வந்தான். பாண்டியன் சந்திரசேகரன் தீனக்குரல் மீண்டும் பேரரசனிடம் சென்றெட்டிற்று. இப்போது உடலும் தளர்வுற்று வயதும் முதிர்ந்த பேரரசன், நாகமன் செயல் நம்பிக்கைத் துரோகமென்று எண்ணி வெகுண்டு "இவனை அடக்கிக் கொண்டு வருபவர் யாருமில்லையா?" என்று அங்கலாய்த்தான். வீரமும் வீறுமுடைய நாகம் நாயகனை அடக்குவதற்கு எவரும் முன்வராது தயங்கிய நிலையில், பேரரசனிடம் அடைப்பக் காரனாக வாழ்வு தொடங்கியிருந்த நாகம் நாயகனின் மைந்தன் விசுவநாத நாயகன் அதனைத் தானே ஏற்றான்.

பாண்டியனுக்கு

முறைப்படி அரசளித்ததுடன் தந்தையையே போரில் முறியடித்து வென்று பேரரசன் முன் கொணர்ந்தபோது கிருட்டிண தேவராயன் உள்ளம் குளிர்ந்து, விசுவநாத நாயகனையே பேரரசின் மதுரை மண்டல அரசனாக்கினான்.

தெலுங்கு வரலாற்றுக் கதைகள் தரும் வீரகாப்பியம் இது. ஆனால் இதில் கற்பனை சிறிது கலந்திருக்கக் கூடுமானாலும் வரலாற்றுண்மையே பெரிது என்பதில் ஐயமில்லை. ஏனெனில்