பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

167

பற்றிய ஏடு. ஒரு துறையில் வேறெந்த அரசியல் நீதி நூலுக்கும் இல்லாத சிறப்பு அதற்கு உண்டு என்னலாம். ஏனெனில் அது அவனே பேரரசனாயிருந்து ஆண்ட அனுபவ உரைகளின் தொகுதி ஆகும். விசய நகர காலத்தில் கலையும் இலக்கியமும் பொதுவாகவே சிறப்புப் பெற்றதனாலும் கிருட்டிணதேவராயன் ஒருவன் ஆட்சியில் அது அடைந்த மலர்ச்சி வேறெந்த அரசன், பேரரசன் ஆட்சியும் காணாததாகும். தமிழுக்குச் சோழப் பேரரசன் முதற் குலோத்துங்கன், சமஸ்கிருதத்திற்கு சந்திரகுப்த விக்கிர மாதித்தன், கிரேக்க மொழிக்கு பெரிக்ளிஸ், இலத்தீனுக்குப் பேரரசன் அகஸ்டஸ், ஆங்கிலத்துக்கு எலிசபெத், விக்டோரியா, அரசியர் காலங்களைக் கூட இவ்வளர்ச்சிக்கு ஓரளவே ஒப்பாகக் கூறலாம். ஏனெனில் இவ்வாட்சிகள் ஒருமொழி இலக்கியம்தான் வளர்த்தன. விசயநகரப் பேரரசர் பொதுவாகவும், கிருட்டிண தேவராயன் சிறப்பாகவும் நான்கு மொழிகளிலே இலக்கியம் வளர்த்தனர். சமஸ்கிருதம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கில் பேரரசன் தெலுங்கில் புலமை பெற்றிருந்தான். அது மட்டுமன்றி அவன் கால மலர்ச்சியும் மிகப் பேரளவில் தெலுங்கு மொழியைச் சார்ந்ததாகவே இருந்தது. ஆனால் இது முற்றிலும் மற்ற மொழிகளின் ஆதரவின்மை காரணமானதன்று. தமிழும், சமஸ்கிருதமும், கன்னடமும் ஏற்கெனவே முழுவளர்ச்சி அல்லது மலர்ச்சிகள் கடந்து தளர்ச்சிப் பருவத்திலிருந்தன. தெலுங்கு விசயநகர காலத்தில் - சிறப்பாகக் கிருட்டிண பேரரசின் தலைமை இடத்திலிருந்து தொலைப்பட்ட அளவில் இம்மலர்ச்சிகளும் முழு அளவு பங்கு கொள்ள முடிந்தது. தமிழும் அதைவிடக் குறைவாகவே மலையாளமும் இக்காலத்தில் வளம் பெற்றது. ஆனால் இடவேறுபாட்டினால் பாதிக்கப்படாத சமஸ்கிருதம் கூடப் பேரரசின் மலர்ச்சியில் தெலுங்கின் மலர்ச்சிக்குப் பிற்பட்டதாகவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பேரரசில் ஒற்றுமையும் அமைதி நலமும் நாட்டிய கிருட்டிண தேவராயனுக்கு அவன் ஆட்சியின் பிற்பகுதியில் குடும்பத்தில் ஒற்றுமையோ, தன் உடலின் முதுமைத் தளர்ச்சி யிடையே நல்லமைதியே கிடையாமல் போய்விட்டது. ஆறு வயதுடைய தன் மூத்த புதல்வனுக்கு அவன் தன் நாளிலேயே இனவாரிசுரிமையளித்து அரசுரிமை உறுதி செய்ய எண்ணி