வெற்றித் திருநகர்
169
ஆயினும் யாராவது முடிசூட்டு வினையில் முந்திக் கொள்ளக் கூடாதென்று அஞ்சி அச்சுதன் வரும் வழியிலேயே திருப்பதியில் ஒரு தடவையும், காளத்தியிலொருதடவையுமாக முடிசூட்டு வினைமுறை நடத்திக் கொண்டு முன்னேறினான். அத்துடன் தலைநகர் வந்தபின் தன்னை எதிர்த்துக் கிருட்டிண தேவராயனின் 18 வயதுச் சிறுவன் பெயரால் உரிமை கோரிய இராமராயனையும் சமரசப்படுத்தி அவனுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதன் மூலம் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முற்பட்டான். ஆனால் எதிரியுடன் கொண்ட நேசம் அவன் முன்னைய நண்பனாகிய சாளுவ நரசிம்மனைப் பகைவனாக்கிற்று. அவன் தமிழகம் வந்து தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தன்னுரிமைக் கொடியேற்றிக் கிளர்ச்சிக்கு முற்பட்டான்.
சாளுவ நரசிம்மன் கிளர்ச்சிக்கு உம்மாத்தூர்த் தலைவனும், திருவாங்கூர் அரசன் திருவடி ராஜா உதயமார்த்தாண்டனும் ஆதரவாயிருந்தார்கள். திருவாங்கூர் அரசன் இதே தறுவாயில் சடையவர்மன் சீவல்லபன் என்ற பாண்டியனை அவன் நாட்டை விட்டுத் துரத்தித் தானே பாண்டி நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான். முன் தலைமுறையில் பாண்டியன் கிருட்டிண தேவராயனிடம் முறையிட்டது போல இத்தலைமுறைப் பாண்டியன் அச்சுததேவராயனிடம் முறையிட்டான். கிளர்ச்சியை அடக்கிப் பாண்டியனுக்கும் உதவும் முறையில் அச்சுத தேவராயன் படைகளுடன் தமிழகம் புறப்பட்டான்.
அச்சுதராயன் 1533-இல் காஞ்சியில் தங்கித்துலாபார விழா ஆற்றினான். அவன் எடைக்கு எடைப் பொன் பிராமணர் களுக்குத் தானம் வழங்கப்பட்டு அவர்கள் ஆதரவு அவன் பக்கம் திரட்டப்பட்டது. அவன் படைகள் அங்கிருந்து திருவாரூர் வந்து தாவள மிட்டது. சாளுவ நரசிம்மன் பேரரசர் படைகளுக்குப் பிடி கொடாது திருவாங்கூருக்கு ஓடித் தஞ்சம் புகுந்தான். பேரரசர் திருவாரூரிலிருந்து கொண்டே தன் மைத்துனன் சாலகராஜு திருமலையையும் அவன் புதல்வன் சாலக திம்மனையும் எதிரிகள் மீது தாக்குதலுக்கு அனுப்பினான்.
மதுரையில் நரசநாயகன் மண்டலத் தலைவனாய் இல்லாவிட்டாலும் அவருடன் கிருட்டிண தேவராயன் ஆட்சியிறுதியில் (1529-1530) ஒரு தடவையும், அச்சுத தேவராயன்