பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

அப்பாத்துரையம் - 13

ஆட்சியில் (1537-1544) ஒரு தடவையும் அதன் பின் 1545-1546-இல் ஒரு தடவையும் ஆட்சியாளராக இருந்ததாகத் தெரிகிறது. திருவாங்கூர்ப் படையெடுப்பில் அவனும் சாலகராஜுவுடன் உதவியிருந்தான்.

சென்று

1573-இல்

திருவாங்கூரில் மலையடிவாரப் போர் என்று குறிக்கப்படும் போராட்டத்தில் திருவாங்கூர் அரசன் திருவடிராசனும் சாளுவ நரசிம்மனும் தோல்வியுற்றதுடன் சிறைப்பிடிக்கப்பட்டுத் தண்டனையுற்றனர். பாண்டியன் சடையவர்மன் சீவல்லபன் (1534-1543) தன் நாடு பெற்றுப் பேரரசனுக்குத் தன் நன்றி தெரிவிக்கும் முறையில் தன் புதல்வியை மணம் செய்து கொடுத்து நேச உடன் படிக்கை செய்து கொண்டான். நாடு மீட்கப்பெற்ற மகிழ்ச்சியிலும், பேரரசன் உறவின் பெருமையிலும் அவன் கொண்ட வீறு“இறந்த காலம் எடுத்த பாண்டியன்” என்ற அவன் விருதுப் பெயரில் துவங்குகிறது. பண்டைப் பாண்டியர் பெருமை எப்படியோ மீண்டும் வந்ததாக அவன் இச்சிறு வெற்றியினூடாகக் கனவு கண்டிருந்தான் என்பதில் ஐயமில்லை.

பாண்டி,திருவாங்கூர்ப் பரப்புகளில் பேரரசன் உறவினனான இராமராய விட்டலராயன் மண்டலத் தலைவனாகவும், விசுவநாதன் அவன் கீழ் மதுரைத் தலைவனாகவும் அமர்த்தப் பட்டனர். அச்சுதராயன் மனைவியின் தங்கையான திருமலாம் பாளுக்குச் சாளுவ நரசிம்மனாண்ட தஞ்சைப் பகுதியைப் பேரரசன் சீதனமாகக் கொடுத்திருந்தான். திருமலாம்பாள் கணவனாகிய செவ்வப்ப நாயகன் அதன்படி இப்போது தஞ்சை மண்டலத் தலைவனாக்கப் பெற்றான். ஆனால் இச்சமயம் ஏற்பட்ட பேரரசின் மாகாண எல்லைச் சீரமைப்பின் ஒரு பகுதியாக, முன் மதுரையைச் சார்ந்திருந்த வல்லம் கோட்டை தஞ்சைக்கும், முன் தஞ்சையைச் சார்ந்திருந்த திருச்சிராப்பள்ளிக் கோட்டை மதுரைக்கும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

கிருட்டிண தேவராயன் காலப்புகழின் ஒரு மறு மலர்ச்சியாக இந்த அச்சுத தேவராயன் ஆட்சித் தொடக்கம் அமைந்திருந்தது. விசயநகரப் பேரரசின் அவைப் புலவனான இராசநாத டிண்டிமன் இப்புகழ் உலா வரலாற்றை ‘அச்சு தராயாப்யுதயம்' என்ற வீறுகாப்பியமாகச் சமஸ்கிருதத்தில் இயற்றினான்.