வெற்றித் திருநகர்
தொலைப் புயலின் முகிற் கீற்றுக்கள்
(171
ஒரிசாவாண்ட கசபதி அரசனும், கோலகொண்டாவில் தன்னாட்சி நிறுவியாளத் தொடங்கிய குலி குதுப்ஷாவும் 1534- க்கு முற்பட்டே விசயநகர் மீது படையெடுத்துத் தோல்வி யுற்றிருந்தார்கள். எனினும் வடமேற்கில் பீசப்பூர் ஆண்ட இஸ்மாயில் ஆதில்கான் இச்சமயம் பார்த்து இரேய்ச்சூர் முட்கலைக் கைப்பற்றினான். இவனை அடுத்து ஆட்சிக்கு வந்த மல்லூ ஆதில்கான் (1534-1535) ஓர் ஆண்டே தவிசிலிருந்தான். அசத்கான்லாரி என்பவனது கிளர்ச்சி ஆட்சி வலுவைக் குறைத் திருந்தது. விசயநகரப் பேரரசன் அச்சுதராயன் இச்சமயத்தில் இழந்த இரேய்ச்சூர்ப் பகுதியைக் கைக்கொண்டான்.
1536-இல் குத்தியில் எழுந்த ஓர் உள்நாட்டுக் கிளர்ச்சி அடக்கப்பட்டது.
வெற்றியும் தோல்வியும் இல்லாத இந்நிலை இன்னொரு திசையிலும் நீடித்தது. போர்ச்சுக்கீசியர் கோவாவிலிருந்து தென்னகக் கரையோரமாக முத்திசையிலும் மெல்லப்பரவித் தங்கள் ஆற்றலை வளர்த்து வந்தனர். கரையோரப் பகுதி களிலுள்ள கோயில்களை அவர்கள் அவ்வப்போது கொள்ளை யிட்டும் வந்தனர். ஒரு தடவை துணிச்சலாகத் திருப்பதிவரை உள்நாட்டில் கைநீட்டி அக்கோயிலைக் கொள்ளை கொண்டனர். மேலைக் கடற்கரையில் சாமூதிரி போன்ற சிற்றரசத் தலைவர்களை அடிக்கடி தாக்கி வென்று அவர்கள் நிலம் கைக்கொண்டு பரவினர். ஆனால் இத்தனைக் கிடையிலும் அவர்கள் விசயநகரப் பேரரசன் அச்சுதராயனுடன் மேலூடாக நட்பாடிக்கொண்டே இருந்தனர்.
அச்சுத தேவராயன் ஆட்சியில் பேரரசுக்கு வெளியே தொடக்கத்தில் கண்ட வெற்றி குறைந்து வந்ததற்கான உண்மைக் காரணம் ஆட்சியின் உட்பூசல்களே. பெருமக்களிடையே அச்சுததேவராயன் மைத்துனன் சாலகராஜு திருமலையும் மற்றொருபுறம் இராமராயனும் வலிமை பெற்று, மேன்மேலும் ஆட்சியைத் தம் கைக்குள்ளாக்கப் போராடி வந்தனர். இராமராயன் பேரரசன் கிருட்டினதேவராயன் மகளை மணம் செய்திருந்ததுடன், தம்பிகள் இருவருக்குமே மீண்டும் அரசகுலத்தில் திருமணம் செய்ததன் மூலம் அச்சுதராயன் அவன்