வெற்றித் திருநகர்
173
சமரசம் செய்து கொண்டு தலைநகரத்துக்குத் திரும்பினான். ஆயினும் எதிரிகளில் ஒருவன் அல்லது அவனது நிலையின் நெருக்கடியறிந்து அவனுக்கு இடக்குச் செய்ததால், அவன் வருவதற்குள் சாலகராஜு திருமலை மைய ஆட்சியில் வேரூன்றிவிட்டான்.
இராமராயனுக்கும் சாலகராஜு திருமலைக்கும் இப்போது மும்முரமான வல்லமைப் போட்டி எழுந்தது. இருதிறத்தவர்களும் கிட்டத்தட்டச் சரிசம அளவிலேயே வலிமைபெற்றிருந்ததனால், தென்னக அரசியல் வாழ்வில் ஒரு முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டது.மக்கள் இந்நிலையில் திரண்டு இச்சமயம் பீசப்பூரில் ஆட்சியாளனாய் அமர்ந்திருந்த இரண்டாம் இப்ராகிம் ஆதில் கானை (1535-1537) நடுத்தீர்ப்பு வழங்க அழைத்தனர். ஆனால் விசயநகர மக்கள் எதிர்பார்த்ததைவிடத் தென்னகத்தின் முட்டுக்கட்டைநிலை மிகுதியாக அகல்விரிவுடன் பரவியிருந்தது. அது விசயநகர எல்லையுடன் அமையாமல் பீசப்பூரையும் பாதித் திருந்தது. ஏனெனில் அகமதுநகர் ஆட்சியில் அகமதுக்குப் பின்வந்த முதலாம் புர்ஹான் (1508-1554) பீசப்பூரில் கிளர்ச்சி செய்து கொண்டிருந்த அசத்கானை ஆதரித்துப் பீசப்பூர் ஆட்சியையும் கைவசப்படுத்தச் சமயம் பார்த்திருந்தான். இதனால் இப்ராகிம் விசயநகர உட்பூசலில் தலையிட்டு ஆதாயமடைய எவ்வளவு ஆர்வமுடையவனாயிருந்தாலும், தன் வீடே பறிபோய்விட இருந்த நிலையில் அவ்வெண்ணத்தைக் கைவிட வேண்டிய தாயிற்று. அவசர அவசரமாக இருதிறத்தினரிடை யிலும் சமரசமே செய்து வைத்துவிட்டு அவன் மீளவேண்டிய வனானான்.
இப்ராகிமின் சமரசத் திட்டப்படி ஆட்சி சாலகராஜு திருமலையிடமே விடப்பட்டது. அதே சமயம் இராமராயனுக்குத் தன் குடிப்பண்ணையிலும் மாகாணத்திலும் தங்கு தடையற்ற தன்னாண்மை வாய்ந்த ஆட்சியுரிமை அளிக்கப்பட்டிருந்தது. இந்த அரைகுறைத் திட்டம் 1542 வரை தட்டின்றி நீடித்தது.
தன் நாடுசென்ற இப்ராகிம் கிளர்ச்சியிலீடுபட்டிருந்த அயல்நாட்டு முஸ்லிம் கட்சித் தலைவர்களையும் 3000-க்கு மேற்பட்ட எதிர்கட்சி முஸ்லிம் வீரர்களையும் நீக்கித் தன்னை வலுப்படுத்த முயன்றான். இராமராயன் இத் தலைவர்களையும்