(174
| -–-
அப்பாத்துரையம் – 13
முஸ்லிம் வீரரையும் தன்னிடம் பணிக்கமர்த்திக் கொண்டு தன் வலிமையை மேலும் பெருக்கிக் கொண்டான்.
அச்சுததேவராயன் 1542-இல் மறைவுற்றான். அச்சமயம் அவன் புதல்வன் முதலாம் வேங்கடன் தவிசேறினான். ஆனால் அவன் அன்னையான பேரரசி தன் இளம் புதல்வனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாள். சாலகராஜு திருமலை அவளது உடன்பிறந்தானானாலும், அவன் அதிகாரம் பற்றி அவளுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது. ஆகவே அவனைத் துரத்தித் தன் பிள்ளைக்கு உதவும்படி அவள் மீண்டும் பீசப்பூர் அரசன் ரண்டாம் இப்ராகீமை வரவழைத்தாள். சாலகராஜு திருமலை இதனால் ஒரு சிறிதும் கவலைப்படாமல், எதிரியைப் பணம் கொடுத்தனுப்பி விட்டு முன்னிலும் முனைப்பாக ஆட்சி ஆதிக்கம் நாடினான். ஆனால் அயலார் உதவியைவிட அவன் ஆதிக்கமே அவனுக்குப் பகையாய் அமைந்தது. முதலாம் வேங்கடனை ஒழித்துக் கொடுங்கோலாட்சி செய்து, முதலாம் வேங்கடன் ஆட்சிக்கு மட்டுமன்றித் தன் ஆதிக்கத்துக்கும் ஓர் ஆண்டுக்குள் அவன் ஒரு முடிவு தேடிக்கொண்டான்.
சாலகராஜ
திருமலையை வெறுத்த
மக்கள் இப்ராகீமையே அழைத்து அரசனாக்கிவிடத் துணிந்தனர். ஆனால் இப்ராகிமும் சில நாட்களுக்குள்ளாகவே மக்கள் வெறுப்புக்காளாகி அவர்களால் துரத்தப்பட்டான்.
ஏற்கெனவே வலிமைபெற்று வந்திருந்த இராமராயன் இப்போது அச்சுததேவராயன் தம்பி புதல்வனான சதாசிவனைத் தவிசேற்றி அவன் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றினான். அத்துடன் அவன் பெனு கொண்டாவை வென்று கைக்கொண்டு, கோமலி, பேதம்செர்லா, ஜூடூர், பெடகல்லு, ஆடவனி முதலிய பல போர்க்களங்களில் சாலகராஜு திருமலையை எதிர்த்து முறியடித்தான். இறுதியாகத் துங்கபத்திரையருகே நடைபெற்ற போரில் சாலகராஜு உயிர் நீத்தான்.
பெயரளவில் சதாசிவனைப் பேரரசனாகக் கொண்டு இராமராயன் ஆட்சி தொடங்கினான். வரலாற்றில் இராமராயன் ஆட்சிக்காலம் (1542-1565) முழுவதும் பெயரளவில் துளுவமரபின் கடைசி அரசன் சதாசிவன் ஆட்சியாகக்