பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

(175

கொள்ளப்பட்டு, இராமராயனுக்குப் பின் அவன் மரபினரின் ஆட்சியே அரவீட்டு மரபின் ஆட்சியாகக் கருதப்படுகிறது. அதற்கேற்ப இராமராயன் காலம் துளுவமரபுப் பேரரசரான பெருங்கல நாயகர் ஊழியின் அந்திவான் மலர்ச்சியாகவே அமைந்துள்ளது. ஆயினும் உண்மையில் அது அரவீட்டுமரபின் முன்னோனான இராமராயன் ஆட்சியாகவே கருதப்படத்தக்கது. அந்நாளைய மக்களும் அதை அவ்வாறே கருதியிருந்தனர்.