வெற்றித் திருநகர்
(177
காண்டே இருந்தது. பேரரசின் அந்தி வானொளியாகப் பிறங்கிய அவன் வாழ்வில் அந்தி வானொளி எதுவும் இல்லை. அது இறுதிவரை நண்பகலொளி யாகவே தளராது நின்று, கற்றூண் பிளந்திறுவது போலத் திடுமென முறிந்தேபட்டது. ஆயினும் இரண்டாம் இரேய்ச்சூர்ப் போருக்குப் பின் கிருட்டிண தேவராயன் முகத்திலும் உள்ளத்திலும் படர்ந்து வந்த வெற்றிப் பெருமிதச் செருக்கு இராமராயன் வாழ்வில் நிலையாகவே இடம் பெற்றிருந்தது. இதனால் கிருட்டிணதேவராயன் வெற்றிப் புகழை இராமராயன் வாழ்வு உருப்பெருக்கிக் காட்டியது போலவே, அது தேசீயச் சிற்பிகளது வாழ்வின் இறுதித் தோல்விகளுக்குரிய வண்ணத் தேசீய அழகையும் உருப்பெருக்கி, ஒளி பெருக்கியே காட்டுகிறது.
ராப காமராயன் இறுதித் தோல்வி - வெற்றிச் செருக்கினிடையே மின்வெட்டொன்றினால் பிளவுற்று வீழ்ந்த மலையெனச் சரிந்த அவன் பெருமுடிவு - பேரரச வாழ்வின் புகழ்முகட்டின் வளரொளி வண்ணமாக நமக்குக் காட்சி தருகிறது.
சிற்பிகளின் தோல்விகள் நடுஊழியின் உறுதி வாய்ந்த தேசீயப் பேரரசுக்கோட்டையைக் கட்டியெழுப்ப முயன்றவர் களின் வெற்றிக்குரிய சின்னங்களென்றால், இராமராயனின் வீழ்ச்சி எதிர்காலத்துக்குரிய தென்னகத் தேசியப் புகழ்க் கோட்டையைக் கட்டியெழுப்புவதற்குரிய முதல் வெற்றிச் சின்னம், முதற்கொடிப் போர்ப் படியென்னலாம்.
தென்னகத்தில் பிறந்தும் வடதிசைப்புயல் மரபை அணைக்கக் கருதியவர்கள் தென்னக இஸ்லாமிய அரசர். அப்புயல் வெள்ளத்துக்கு விசயநகரத்தின் தொடக்கக் காலப் பேரரசர் தடைவேலியிட்டுத் தடுக்கவே முயன்றனர். தேசீயச் சிற்பிகள் அதற்கு நிலையான கல்லணை போல முயன்று, பேரவதியிடையே அணைக்கட்டுக்கான கடைகாலும் அடித்தளமும் மட்டுமே இட்டுச் சென்றனர். ஆனால் மையப்பேரரசர், சிறப்பாகக் கிருட்டிண தேவராயன் மலையென அணையெழுப்பி அது தடுத்து நிறுத்தியதனுடன் நில்லாது, மடையடைத்தும் திறந்தும் வெள்ளத்தை முற்றிலும் தன் வயப்படுத்தினான்.ஆனால் இருவர் மரபுடனும் பயின்று தென்றல் மரபுடனும் புயல் மரபுடனும் ஒருங்கே ஊடாடிய இராமராயனோ,