வெற்றித் திருநகர்
(181
முஸ்லிம்களை அடக்குவதற்காகவே முஸ்லிமல்லாதவர்களை அதாவது இந்துக்களை - சிறப்பாகத் தென்னகத் தேசீயத்தில் என்றும் ஒட்டாது மிதந்து வந்துள்ள பிராமணர்களை - ஆட்சித் துறைகளிலும் படைத்துறையிலும் மிகுதியாகப் பயன்படுத்த முன் வந்தனர். தென்னக இஸ்லாமிய ஆட்சியாளருடன் ஒத்துழைத்த மராத்தி வீரர், மராத்திய பிராமணர் தலைமையும் துணையும் கொண்டே மராத்திய பிராமணர் தலைமையும் துணையும் கொண்டே ஷாஜியும் சிவாஜியும் மராத்திய தேசீயத்தைக் கரு மையமாகவும் தென்னகத் தேசீயத்தை மையமாகவும் கொண்ட ஒரு புதிய உயிர்த் தேசீய எழுச்சியாய், விந்த எல்லை கடந்து வடதிசைப் புயற்பேரரசாக வளர்ந்த முகலாயர் ஆட்சியையும் புகுந்து மாற்றிப் பண்பேற்றத் தொடங்கிற்று. முஸ்லீம் தேசீயம், முஸ்லிமல்லாத தேசீயம் ஆகிய இரண்டையும் அடக்கப் பயன்படும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இரு தேசீயத்துடனும் அளாவாத உயர்குடி 'இந்து' தேசீயவாதிகளை அக்பரும் அவர் பின்னோர்களும் பயன்படுத்தத் தொடங்கினர்.
ஆட்சித் துறையிலும் படைத்துறையிலும் இராமராயன் செய்த மாறுதல்களில் சில பேரரசின் ஆற்றலுக்குத் தளர்ச்சி உண்டு பண்ணின என்பது உண்மையே. ஆனால் ‘இந்து' தேசீயம் என்ற மாயக் கற்பனை நடுநிலையாளரான தலைசிறந்த வரலாற்றுப் பேராசிரியர்களைக் கூட மெய்ந்நிலை திரித்துக் காணச் செய்துள்ளது. அவர்கள் இராமராயனது அரசியற் குறைபாட்டைத் தேசீயக்குறைபாடாகக் காட்ட முயல்கின்றனர்.
'இந்து' தேசீயத்தில் நச்சுப்பயிர்களாக வளர்ந்த கூறுகளில் சில பண்டைத் தமிழகத் தேசீயத்திலேயே மெல்ல மெல்ல உருவாவதைக் காணலாம். சமய சமரசத்தின் பெயரால் சங்ககால அரசர் பேரரசர் சிந்து கங்கை வெளியிலோ, தென்னகத்தின் பிறபகுதிகளிலோ கிட்டாத உரிமைகளையும் சலுகைகளையும் மேலாண்மைகளையும் வைதிக நெறிக்கும் வேள்வி நெறிக்கும் அளிப்பது காண்கிறோம். அதே சமயம் சங்க காலத்தில் வாழ்ந்த ஏழை பங்காளர்களான புலவர்கட்கு, பாமணக்கும் புகழ்ப் பாணர்க்கு, கலை விறலியர்க்கு, வீரப் பொருநர்க்குச் சங்க காலத்தில் தமிழரசர் தந்த மதிப்புப் படிப்படியாகச் சமயத்தின் பெயரால் முதலில் கோயில்களுக்கும் தமிழ்த்தெய்வப் பாடல்