வெற்றித் திருநகர்
183
மற்றெல்லாச் சலுகைகளையும் மக்களிடையே ஒருங்கே பெற்றிருந்த ஒரு வகுப்பின் மீதே குவிக்கப்பட்டன. தகுதி திறமையுடைய நாடு அது காரணமாக மற்ற நாடுகளை அடக்கி யாள்வது எப்படி தேசீயமாகாதோ, அப்படியே தகுதி திறமை குவிந்து கிடப்பதாகத் தோற்றமளிக்கும் ஒரு வகுப்பு தேசீயமாகாது. இந்த உண்மையைத் தமிழக அரசர், பேரரசர் மெல்ல மெல்ல மறந்து வந்தனர். அவர்களைப் பின்பற்றி நாளடைவில் பிற தென்னக, கீழ்திசை அரசர், பேரரசர் தேசீய பண்பும் வளமும் கடவிட்டே வந்துள்ளனர். ஆனால் இந்த முன்பின் குளறுபடிகளிடையே இராமராயன் ஆட்சி மரபு ஒரு மின்னொளித் தேசீயக்கனவாக அமைந்துள்ளது.
இராமராயன் தேசீயத்துக்கு வரலாற்றாசிரியர் பலர் மதிப்புத் தரத் தவறிவிட்டாலும் தென்னக வாழ்வு வரலாறுகள் தம் பண்பு மூலமே அதற்குச் சீரிய சான்றளித்துள்ளது. வித்தியாரணியர் வழிவந்த 'இந்து' தேசீயம் விந்தமலைக்கு வடக்கே தங்குதடையற்ற வளர்ச்சியடைந்து, இந்து தேசீயம், முஸ்லீம் தேசீயம் என்ற தேசீய வேறுபாடுகளை உருவாக்கி இருவேறு தேசீய அரசுகளாகவே பிரிந்துள்ளது. ஒரே அரசியலிணைப்பின் காரணமாக, தென்னகத்திலும் இதன் தொலை எதிரொலிகள் இருந்தாலும் இத்தகைய சமயச் சார்பான தேசியமோ, தேசீயப் பிளவோ தென்னகத்தில் கனவின் நிழலாகக் கூடத் தலைகாட்ட முடியவில்லை. இஸ்லாம் மட்டுமன்றி, கிறித்துவ முதலிய திருநெறிகளும் தென்னகத்தின் திருநெறிகளுள் திருநெறிகளாக இயங்கி ஒரே தேசீயம் வளர்த்து வருகின்றன.
போலித் தேசீயப் பண்புகளை அகற்றி, தேசீயத்துக்கு எதிரான வருண, சாதி, சமய, இனவேறுபாடுகளைத் தூள் தூளாக்கி, தென்னகத் தேசீயம் உலகின் மணித்தேசீயமாய் உலகை ஓருலகமாக்க உதவும் தாய்த் தேசீயமாய் விளங்குவது உறுதி. அந்நிலைக்கு விசயநகர வரலாறு மணிவிளக்காய், இராமராயன் புகழ் அதன் மணிச்சுடராய் இலங்குவது காணலாம்.
இராமராயன் ஆட்சித் தொடக்கம் : தமிழக நிலை
விசயநகரப் பேரரசில் பெயரளவில் சதாசிவன் (1542-1576) ஆட்சியாளனாக வாழ்ந்தான். ஆனால் பெயரளவான அவன்