பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

(193

இன்னல்களுக்கு ஆளாகி அங்கிருந்து விசய நகரம் வந்து கிருட்டிண தேவராயனிடம் பணியமர்வு பெற்றான். கிருட்டிண தேவராயன் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமானதன்றி, அவன் கிருட்டிணதேவராயன் புதல்வியையும் மனைவியாகப் பெற்றான். விசயநகர வாழ்வுடனும் ஆட்சியுடனும் அவன் தொடர்பு பெருகப் பெருக, கோலகொண் டாவிலுள்ள அவன் பழந் தொடர்புகளும் பழக்கமும் அவனுக்கு விசயநகர ஆட்சியில் பயன்பட்டன.

கோலகொண்டாவில் அரண்மனையிலும் ஆட்சியிலும் பதவியிலும் இருந்த முஸ்லிம், முஸ்லிமல்லாத பெருமக்கள் பலருடனும் இராமராயன் நன்கு பழகியிருந்தான். நெருங்கிய நண்பர்களும் பலர். கோல்கொண்டா அரசியலிலிருந்து விலக்கப்பட்ட படை வீரர்களுக்கும் தலைவர்களுக்கும் அவன் விசய நகரத்தில் பணியும் ஆதரவும் அளிக்க முன் வந்தபின் இந்த நட்புச் சூழல் இன்னும் பெருகிற்று. உண்மையில் புதிய மன்னன் இப்ராகிம் குதுப்ஷா ஆட்சிக்கு வருமுன் தமையனால் துரத்தப் பட்டு விசய நகரத்தில் அடைக்கலம் புகுந்த சமயம், இராமராயனே அவனுக்கு இருகை விரித்து அன்பாதரவும் உதவியும் அளித்திருந்தான். அண்ணன் மறைவின் பின் அவன் ஆட்சி கைக்கொள்ளப் புறப்பட்டபோதும், இராமராயன் ஒரு படையுடன் தன் இளவல் வெங்கடாத்திரியை அவனுக்கு உதவியாக அனுப்பியிருந்தான்.

கோலகொண்டாவில் உச்ச உயர்பணியில் இராமராயன் தோழர்களா யிருந்தவர்களில் ஒருவன் ராஜா இம்மடி ஜகதேவராவ் என்பவன் கோலகொண்டாவில் ஜம்ஷெட் நாட்களில் பேரும் புகழும் பெற்ற இப்பணியாளன் அரசியல் புயல்களில் சிக்கி, அவ்வரசைவிட்டுப் போரில் இமத்ஷாவின் பணி நாட வேண்டி வந்தது. அங்கும் அவன் வாழ்வு நிலை கொள்ளவில்லை. ஆனால் இராமராயன் அவனை விசய நகரத்துக்கு அழைத்து, அவனையும் தன் நம்பிக்கைக்குரிய பெரும் படைத்தலை வனாக்கியிருந்தான். கோலகொண்டாப் போரில் அவன் தந்த உதவி சிறிதன்று.

இராமராயன் உற்ற நண்பனாக ஆட்சி தொடங்கிய இப்ராகிம் குதப்ஷானி. இராமராயரின் பேரரசு கடந்த