194
அப்பாத்துரையம் – 13
தென்னகப் புகழ் வளருந்தோறும் மெல்ல மெல்ல நட்பை மறந்து பொறாமையும் புழுக்கமும் கொண்டான். அகமது நகர்ப் போராட்டத்தில் அவன் இரண்டக நிலை இராமராயனுக்குக் கூடப் புரியாப் புதிராயிருந்தது. அகமது நகர முற்றுகையைக் கைவிடுவதற்கு மாறாகக் கொண்ட பள்ளியை விசயநகருக்களிப்ப தாக நிஜாம்ஷாவின் சார்பில் அவனே உறுதி கூறியிருந்ததாக இஸ்லாமிய வரலாற்றாசிரியர் குறிக்கின்றனர். ஆனால் அவன் இதனை நிறைவேற்றவில்லை. இதுபற்றி அவனிடம் விளக்கம் கோரப்பட்ட போது அவன் இரவோடிரவாகக் கோலகொண்டா வுக்குச் சென்று நேரடியாகவே பகைச்செயலில் முனைந்தான். அது மட்டுமன்றி இராமராயன் எதிரியாகிய நிஜாம்ஷாவின் புதல்வியை மணஞ்செய்து அவன் தன் எதிர்ப்பை வலியுறுத்தத் துணிந்தான். மணவினைக்காகக் குறித்த இடமோ கலியாணிக் கோட்டை அது இராமராயன் நண்பனான அலி ஆதில் ஷாவிடம் இருந்தது.
இராமராயன் உள்ளம் இப்ராகிம் மீதும் குதுப்ஷா மீதும் குமுறிக் கொண்டிருந்தது. அச்சமயம் கலியாணிக் கோட்டை பற்றிய அச்சத்தில் அலி ஆதில்ஷா அவனை உதவிக்கழைத்தான். இதை வாய்ப்பாகக் கொண்டு அவன் ஆதில்ஷாவை வரவேற்று, அவனை இட்டுக்கொண்டு பெரும்படையுடன் அகமது நகர், கோல கொண்டா ஆகிய இரண்டு அரசுகளையும் தாக்கப் புறப்பட்டான். அவன் உடன் பிறந்தான் வெங்கடாத்திரி படைத் தலைவன் ஜகதேவராவுடனும் அயினுல் முலக்குடனும் ஒரு பெரும் படையைக் கோல்கொண்டா அரசின் தென்பகுதியில் தாக்கும்படி அனுப்பினான். அலி ஆதிர்ஷாவுடனும் அலி பரீத்ஷாவுடனும் இராமராயனே மற்றொரு படை நடத்திக் காண்டு எதிரிகள் கைப்பற்றியிருந்த கலியாணிக் கோட்டை நோக்கி முன்னேறினான்.
இராமராயன் படைகள் வருவது கேட்டதே நிஜாம்ஷாவும் குதுப்ஷாவும் தம் கூடாரங்களை அவசர அவசரமாகப் பெயர்த் தெடுத்துக் கொண்டு தம்தம் தலைநகர்கள் நோக்கி ஓட்டமெடுத்தனர். இராமராயன் நிஜாம் ஷாவையும், ஆதில்ஷா கோல கொண்டா அரசன் குதுப்ஷாவையும் பின்பற்றித் தாக்கிச் சென்றனர். விசயநகரப் படைகள் நிஜாம்ஷாவின் தலைநகரான அகமது நகர் வரை வெற்றிகரமாக முன்னேறினாலும் சேனா