இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
200
அப்பாத்துரையம் - 13
அவ்வடதிசைக் கத்தியும் மேலை உலைக் களத்தில் புதிது துவைக்கப்பட்டுத் தென்னகத்தையும் கீழ்திசை யையும் உடல் பொருளாவி முத்துறையிலும் அடிமைப்படுத்தி வைக்கும் புதியமாயக் கருவியாயிற்று.
வானிடையாடும் வண்ணமாமுகில் வில்லாகத் தென்னகத் தேசியக் கனவுகண்டு அதனிடையே மின்னொளி கண்டு மாள நேர்ந்த மயிலின் இறுதி நடமாகவே தென்னப் புயற்போர் அமைகின்றது.