பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

அப்பாத்துரையம் – 13

பேரிடி. தென்னகப் புயற்போரோ உருவாகி வந்த தென்னகத் தேசீயத்தை மீண்டும் முதிராத் தேசீய நிலையில் சிதற வைத்துத் தேச வாழ்வுக்கே உடனடி அதிர்ச்சியும், நூற்றாண்டு கணக்காக கலக்கமும் விளைத்திருந்த நிகழ்ச்சி ஆகும். வடதிசைப் பானிப்பட்டுக்குக் கூட அதுவே வழிவகுத்த மூல முதற்புயல் என்னலாம். இது மட்டுமன்று. மேலைப் புயலுடன் கூட அதற்குத் தொடர்பு உண்டு. ஏனெனில் தென்னகப் புயற்போரில் வீழ்ச்சியுற்ற தேசீய மரபில் வந்தவனே திப்பு. நெப்போலியனுடன் அவன் தொடர்பு கொள்ள முயன்றவன். திப்பு வீழ்ச்சியின் பின்னரே நெப்போலியன் வீழ்ச்சியுற்றான். தென்னகப் புயல் இவ்வாறு உலகின் மற்ற இருபெரும் புயல்களுக்கு மூல மரபாய், மூன்றிலும் இருதிசைத் தோல்விக்கே வித்தாய் அமைந்தது - மூன்றிலும் பெயரளவாக வென்றவர்கள் தென்னகத் தேசியத்தின் எதிர் தரப்பினரேயாவர்.

'புயற்போருக்குரிய பெயர் வகையிலே ஒரு வரலாறு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய வரலாற்றுக் கணிப்பாளரைப் பின்பற்றி அது சிலகாலம் தலைக்கோட்டைப் போர் என்றே வழங்கி வந்தது. அந்தப் பெயருடனேயே விசய நகர ஆர்வலர் அதன் புகழ் பரப்பியிருந்தனர். ஆனால் இஸ்லாமியரல்லாத காலக் கணிப்பாளர் விரிவுரைகளைக் கண்டபின் அது இராட்சசித் தங்கிடிப் போர் என்றழைக்கப்படுகிறது. போர் கிருட்டிணை யாற்றருகே நடைபெற்றது. அதனருகேயுள்ள ஊர்களில் இராட்சசி, தங்கிடி என்ற இரு சிற்றூர்களே போர்க்களத்துக்கு அருகாமையிலிருந்தன. ஆனால் இஸ்லாமியர் வந்து ஒருங்கு கூடியிருந்த இடமே தலைக்கோட்டை ஊரைச் சார்ந்ததாயிருந்தது. எல்லாத் தற்கால வரலாற்றாசிரியர்களும் இராட்சசித் தங்கிடிப்போர் என்ற பெயரையே இந்நிலையில் ஏற்புடைய தென்று கருதுகின்றனர்.

போர்க் காரணங்கள்

போருக்குரியனவாக நமக்குக் கிட்டும் சான்றுகளில் மிக முற்பட்டவை இஸ்லாமிய வரலாற்றுக் கணிப்புக்களே. போர் நடவடிக்கைகளைப் பற்றிய வகையில் மட்டுமன்றி போர்க் காரணங்களைப் பற்றியும் அவை ஒன்றுடன் ஒன்று முரண் படுகின்றன. ஆனால் வேறு வேறு வகையில் அவையாவும்