வெற்றித் திருநகர்
அவமதித்தானென்றும்,
(205
வடதிசைப் புயல் மரபே வளர்த்துக் கற்பனைக் கோட்டைகள் கட்டியுள்ளன. இராமராயன் இஸ்லாத்தையும் இஸ்லாம் மக்களையும் இஸ்லாமிய அரசர்களையும் தூதர்களையும் அடிக்கடி இழிவுபடுத்தினான் என்றும், ஒருபுறம் நண்பனாக நடித்த வண்ணமே அவர்கள் நாட்டுப் பகுதிகளை ப அச்சுறுத்திப் பற்றினானென்றும், ஸ்லாமிய அரசுகள் எள்ளளவும் வாழமுடியாத அளவு அவன் வலிமை வளர்ந்து வந்ததால் அவை என்றும் அஞ்சி அஞ்சி ஒழுக வேண்டி வந்ததென்றும் அவர்கள் விரித்தெழுதுகின்றனர். இந்நான்கு குற்றச்சாட்டுக்களிலும் இஸ்லாமிய ஆசிரியர்களே தரும் இராமராயன் ஆட்சி வரலாற்று நிகழ்ச்சிகள் முதல் மூன்று குற்றச்சாட்டுகளையும் முற்றிலும் பொய்ப்பிக் கின்றன. ஏனெனில் சமகால இஸ்லாமியர் ஆதாரங்களிலிருந்தே இராமராயன் இஸ்லாமியர்களுக்குப் பெரும் பதவிகளும் படைத்துறையில் மிகுதி இடமும் கொடுத்திருந்தானென்றும், தலைநகரிலேயே பள்ளி, தனித்தொழு கையுரிமை, தனி வாழ்வு, தனியாட்சி யுரிமையுடன் துருக்க வாடா என்ற ஒரு பகுதியே அவர்கட்கு ஒதுக்கப்பட்டிருந்ததென்றும் அறிகிறோம். வைதிகர் முதலிய பிற சமயத்தினர் கண்டனங்களைக் கூடப் பொருட்படுத்தாமல் இராமராயன் காலத்தில் அவர்கள் நகரெல்லையிலேயே மாடுகளை இறைச்சிக்குப் பயன்படுத்தும்படி இணக்கமளிக்கப் பட்டிருந்தனர். முன்னைய பேரரசர்களைப் போலவே அவனும் தன் இஸ்லாமியப் பணியாளர் அரசு வணக்கவினை முறைக்காகத் தன்னருகே திருக்குரானை வைத்திருந்தான். இராமராயன் நட்புப் போர்வையில் பிற இஸ்லாமிய அரசர் நாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றினான் என்பதும் அவர்களே தரும் வரலாற்று நிகழ்ச்சிகளை நோக்க உண்மைக்கு முரண்பட்டதாகும்.
நான்காவது காரணத்தில்கூட ஒரு சிறிதும் மெய்ம்மை கிடையாது. ஏனெனில் வடதிசைப் புயல் மரபில் வந்த இஸ்லாமியக் கூற்றில் மூன்று பகுதியை மறுத்து ‘இந்து தேசிய’ வாதிகள் இதை ஆவலுடன் அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். புயல் மரபுகூடத் தென்திசையில் சமயங் கடந்தது என்று கருத இது இடந்தருகிறது. ஆனால் இந்த ஒன்றுபட்ட புயல்மரபுக் கூறுகூட முற்றிலும் இராமராயன் வீரவாழ்க்கைப் போக்குடன் இசையவில்லை. இஸ்லாமிய வல்லரசுகளை ஒன்றுபடுத்தி