208
அப்பாத்துரையம் – 13
தொடர் பில்லாமல் ஒதுக்கியிருந்தான் என்று இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஜபீரி தெளிவு படுத்தியுள்ளார்.
போர் பற்றிய முஸ்லிம் ஆதாரங்கள், முஸ்லீம் அல்லாத ஆதாரங்கள் இவ்வாறாக ஒன்றுக்கொன்று முரண்பட்டாலும், அவற்றின் ஒப்பீடு ஓரளவு உண்மை நிலைகளை உய்த்துணர உதவுகிறது. பெரும்பாலும் முஸ்லீம் ஆதாரங்கள் முற்பட்டவை. அவை மெய்ம்மை நிலை உணர்ந்தே எழுதப்பட்டவை. ஆயினும் மதச் சார்பு, தத்தம் அரசுச் சார்புகளால் அவை செய்திகளைத் திரித்துரைக்கின்றன. எல்லா முஸ்லீம் ஆதாரங்களையும் ஒப்பிட்டுக் காண்பதனால் இத்திரிப்புக்களில் சில விளக்கம் பெறுகின்றன. மற்றும் சில முஸ்லீம் சார்பற்ற ஆதாரங்களால் தெளிவு பெறுகின்றன. அதே சமயம் முஸ்லீம் சார்பற்ற ஆதாரங்கள் காலத்தால் பிந்தியவை. முஸ்லீம் ஆதாரங்களைப் போல அவை மனமார எதையும் மிகுதி திரித்துரைக்க வில்லையானாலும் மிகையுரைகள், காலப் போக்கில் எழுந்த அரைகுறைக் கேள்விகள் விரவியிருப்பதனால் அவற்றில் எப்போதும் மெய்ம்மை பிரித்துணர முடிவது அரிதாயிருக்கிறது. ஆனால் இத்தகைய இடங்களில் முஸ்லீம் ஆதாரங்களும், அந்நாளைய மேலைநாட்டினர் எழுத்து மூலங்களும் பெரிதும் உதவுபவை ஆகும்.
இஸ்லாமிய அரசுகளின் கூட்டுறவில் தென்னக அரசுகள் ஐந்துமோ, வடதிசை இஸ்லாமிய பேரரசோ கலந்து கொண்டதாக இஸ்லாமியச் சார்பற்ற ஆதாரங்கள் கூறுவது காலப்போக்கில் ஏற்பட்ட மிகையுரைக் குளறுபடிகளேயாகும். இஸ்லாமியக் கணிப்புக்களின் ஒப்பீடு இதை நன்கு காட்டுகிறது. கூட்டுறவில் உண்மையில் மூலமுதல்வனாகக் கோலகொண்டா அரசன் இப்ராகீம் குத்ப்ஷாவும், அவன் நெருங்கிய தோழன் அகமது நகர் அரசன் நிஜாம்ஷாவும், இருவர் வற்புறுத்தலுக்கு ணங்கிய பீசப்பூர் அரசன் அலி ஆதில்ஷாவும் மட்டுமே என்பதையும் ஆதார ஒப்பீடுகள் தெளிவுபடுத்துகின்றன.
போரில் ஈடுபட்ட முஸ்லீம் அரசுகள் மூன்றில் கூட பீசப்பூர் அரசன் அலி ஆதில்ஷாவின் நிலை போரில் அவன் கொண்ட பங்கு ஆகியவற்றைப் பற்றி முஸ்லீம் ஆதாரங்கள் சரியான விவரங்கள் தராமல் முரண்பட்ட பல செய்திகள்