பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

209

கூறுகின்றன. ஆனால் அவற்றின் ஒப்பீடும் முஸ்லீம் சார்பற்ற ஆதாரங்கள், வெளிநாட்டார் சான்றுகள் ஆகியவற்றின் துணையும் அவற்றிடையே மெய்ம்மை காணப் பெரிதும் உதவுகின்றன.

இராமராயன் பொது முறைப்படை பலத்தைப் பற்றியே பெரிஷ்டா பெருமதிப்புடன் பேசுகிறார். இராமராயன் பேரரசில் உள்ள 60 துறைமுகங்களும் எண்ணற்ற நகரங்களும் மாகாண மாவட்டங்களும் சேர்ந்து அவனுக்கு வழங்கும் திறைவளம் சிறிதன்று, மிகப் பெரிது. அதன் துணை கொண்டு அவன் பேணும் படைபலமோ எந்த ஓரிரு இஸ்லாமிய அரசரும் எளிதில் எதிர்த்து ஒரு சிறிதுகூடச் சமாளிக்க எண்ணக்கூடாத தாயிருந்தது.இராட்ச சித்தங்கிடிப் போரில் இந்தப் பொதுமுறை வலிமை ஒரு சிறிதும் குறைந்திருக்கக் கூடும் என்று எண்ண இடமில்லை. அது உண்மையில் மிகப் பெரிதாகவே இருந்திருக்க வழி உண்டு. ஏனெனில், பெரிஷ்டா கூறுகிறபடியே, முஸ்லிம் அரசுகளின் ஒன்றுபட்ட படைகளை எதிர்க்கும்படி அவன் கிருட்டிணையாற் றெல்லையிலிருந்து இலங்கை வரையுள்ள எல்லா அரசர், சிற்றரசர், பெருமக்களையும் படை திரட்டி வரும்படி அழைத்திருந்தான் என்று அறிகிறோம். அதே சமயம் விசயநகரப் படைகளை விட முஸ்லிம் அரசுகளின் படைகள் பெரியன என்றோ, அதை எளிதில் வென்று மருண்டோட வைக்கக் கூடியவையென்றோ, இராட்சசித் தங்கிடிப் போருக்கு முற்பட் நிலை நோக்கி யாரும் கூறிவிடவும் முடியாது. ஆயினும் இந்த மெய்ம்மைகளுக்கெல்லாம் முரண்பட்ட நிலையில் இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் இப்போர் ஒருநாளில் முடிந்துவிட்ட தென்றும், ஒரு நாளில் நான்கு மணிநேரப் போருக்குள் இஸ்லாமிய அரசர் அத்தனை பெரும்படையையும் முறியடித்த துடன், அழித்தவர் போகத் துரத்தியும், துரத்தியவர் போக அழித்தும் எளிய வெற்றி கண்டதாகக் குறிப்பிடுகின்றனர்.

கு

முஸ்லிமல்லாத ஆதாரங்கள், சிறப்பாக, கன்னட மராத்தி மொழிகளிலுள்ள இராமராயன் வரலாறும், இக்கேரி மன்னன் வரலாற்றுக் காப்பியமான கேளதிநிருப விசயமும் போர் மூன்று மாதம் நடைபெற்றதாக உரைக்கின்றன.