பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

அப்பாத்துரையம் - 13

இஸ்லாமிய ஆதாரங்களின் திரிபுரைகளுக்கும் மற்றவற்றின் மிகையுரைகளுக்கும் இடைப்பட்ட மெய்ம்மையை வரலாறுகள் தரும் நாள் விவரங்களே காட்டுகின்றன. முஸ்லிம் அரசர்கள் படைகள் திரண்டு தாக்க வருவது குறித்து இராமராயன் 1564-ஆம் ஆண்டு விசயதசமி நாளன்று அதாவது செப்டம்பர் 15-இல் அவையில் வந்து கூடியிருந்த சிற்றரசர், படைத்தலைவர் பெருமக்களுக்குக் கூறிப் பெரும்படைத் திரட்டுக்கு ஆணையிட்ட தாகக் கன்னட, மராத்தி வரலாற்றேடு கூறுகிறது. போரில் இராமராயன் உயிரிழந்ததாக அது குறிக்கும் நாள் விவரங்கள் 1565 ஜனவரி 23-ஆம் நாளுடன் ஒத்துவருகின்றன. போர் மொத்தம் 3 மாதம் நடைபெற்றதாக அது கூறினாலும் போர் நிகழ்ச்சிகள் பற்றிய அதன் நாட்குறிப்பு ஒரு மாத அளவாகவே அமைகிறது. முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் முஸ்லிம் அரசின் கூட்டுப்படை திரண்ட நாளாக 1564 டிசம்பர் 26-ஐயே கூறுவதால், இந் நாளுக்கும் அடுத்த ஆண்டு (1565) ஜனவரி 23-க்கும் இடைப்பட்ட ஒரு மாத காலமே போர்க் காலமாய் இருத்தல் வேண்டும் என்பது தெளிவாகின்றது.

ஏறத்தாழ முப்பது நாள் நடைபெற்ற இப்போரில் முதல் 27 நாள் போரிலும் அலி ஆதில்ஷாவின் படைகள் கலந்து கொள்ள வில்லையென்றும், இப்ராகிம் குதுப்ஷாவும் ஹுசேன் நிஜாம் ஷாவும் மட்டுமே நின்று போராடித் தோல்வி அடைந்தனர் என்றும் கன்னட மராத்தி வரலாறு கூறுகிறது. அதன் பின் மூன்று நாட்களினிடையே முஸ்லிம் அரசுகள் சமரசப் பேச்சுப் பேசுவதாகப் பாவித்துக் கொண்டே ஒரு புறம் அலி ஆதில்ஷா வற்புறுத்தி நெருக்கியும், மறுபுறம் அவனுடனும் விசயநகரத்தின் இஸ்லாமிய வீரர், படைவீரருடனும் சதிசெய்தும், இறுதி நாளில் திடீர்ச் சூழ்ச்சிகளாலேயே இராமராயனை வீழ்த்தினர் என்றும் அவ்வாதாரம் கூறுகிறது.

மேற்கூறிய ஆதாரங்களின் கூற்று மெய்ம்மையானது என்பதை இஸ்லாமிய ஆதாரங்களின் துண்டுத் துணுக்கான முரணுரைகள் ஒத்துக் கொள்ளாமல் மெய்ப்பிக்கின்றன. நான்கு மணிநேரப் போர் வரலாற்றிடையே முப்பது நாள் போர் நிகழ்ச்சிகளை அடக்க முயன்று முடியாததால், அவர்கள் போர்த் தொடக்கத்திலேயே சமரசப் பேச்சுக்கள் தொடங்கியதாக