212
படைபலம்
அப்பாத்துரையம் – 13
இராட்சசித் தங்கிடிப் போரில் இருதரப்புப் படைகளின் எண்ணிக்கை பற்றிய முழுமையான மெய் விவரங்கள் நம்மை வந்தெட்டவில்லையாயினும் இருதரப்பிலுமே படைவீரர் எண்ணிக்கையும் வலிமையும் தென்னகம் முன் என்றும், பின் என்றும் காணாத தேசீய அளவாயிருந்ததென்று எண்ணிக்கை பற்றிய தாறுமாறான தகவல்களும் விரிவுரைகளும் போர் விளைவும் காட்டுகின்றன. பெரிஷ்டா விசய நகரப் படைகளில் குதிரை வீரர் மட்டும் 70,000 என்றும் காலாட் படையினர் 90,000 என்றும் மதிப்பிடுகிறார். கோலகொண்டா வரலாற்றாசிரியர் இராமராயன் படையில்மட்டும் ஒரு இலட்சம் குதிரை வீரரும் மூன்று இலட்சம் காலாட் படைகளும் இருந்தன என்று கூறுகிறார். சலீத் அலி என்ற வரலாற்றாசிரியர் குறிப்பின்படி, இராமராயன் உடன் பிறந்தார்களான வெங்கடாத்திரி, திருமலை ஆகியவர்களிடத்தில் மட்டும் முறையே 20 ஆயிரம், 12 ஆயிரம் குதிரை வீரரும், தலைக்கு ஆயிரம் யானைகளும், ஒரு இலட்ச அளவும் பன்னீராயிர அளவுமான காலாட்படை வீரரும் இருந்ததாகத் தெரிகிறது. கூட்டோ, பெரியா சூசா ஆகிய போர்ச்சுக்கீசியர் காலாள் வீரர் 6 இலட்சம் என்பர். கன்னட மராத்தி வரலாறோ காலாள் வீரர் 12 இலட்சம், குதிரை வீரர் 68 லட்சம், யானைகள் 18 ஆயிரம், ஒட்டகை18 இலட்சம் என்ற பாரக் கணக்குத் தருகின்றன.
விசயநகரத் திசையில் முஸ்லிம் படைவீரர் மட்டுமே ஒன்றரை இலட்சம் பேருக்கு மேற்பட்டவர் என்று நாம் அறிவதால், கோலகொண்டா வரலாற்றாசிரியர் சயீர் அலி தரும் எண்ணிக்கை தவறானதன்று, மிகைப்பட்டது மன்று என்று கூறலாம்.
முஸ்லிம் ஆசிரியர்கள் எதிரி படைகளின் மதிப்பீடு தருகிறார்களேயன்றி முஸ்லிம் அரசர் படைகள்பற்றி எதுவும் கூறவில்லை. கன்னட - மராத்தி வரலாறு விசய நகரத் தரப்புக்குத் தரும் பாரிய இலக்கங்களையே எதிர் தரப்புக்கும் தருகிறது. காலாட்கள் 250 இலட்சம் என்றும், குதிரைகள் 12,000 என்றும், யானைகள் ஒரு இலட்சம் என்றும், ஒட்டகைகள் 2 இலட்சம் என்றும், இவை தவிரப் பீரங்கிப் படை இருந்ததென்றும் அது
-