வெற்றித் திருநகர்
219
அதிர்ச்சியடங்கு முன், விசயநகர முஸ்லிம் படைத்தலைவர் இருவரும் தம்மிடமிருந்து 80 ஆயிரம்,70 ஆயிரம் படைவீரருடன் தம் தலைவனைத் தாமே எதிர்த்து எதிரிகளுடன் சேர்ந்தனர். போர்த்தாக்குதலும் சூழ்ச்சித் தாக்குதலும் இப்போது இராமராயன் இதயத் தாக்குதலாக மாறின. அடுக்கடுக்கான இந்த அதிர்ச்சிகளிடையே குழப்பத்தைத் தவிர்க்க வேண்டிய தவைவன் உள்ளத்திலேயே இப்போது குழப்பம் சிறிது தலைகாட்டிற்று. அது ஆறி அமைந்துவிட்டால் தம்கூட்டுச் சதிச்செயல்கள்கூடத் தமக்கு ஆதரவளிக்காது என்று கண்ட எதிரிகள் படைகளை எதிர்ப்பதைக் கைவிட்டு அவனையே தாக்க முனைந்தனர். அவர்கள் எதிர்பார்த்த அளவைவிடச் சந்தர்ப்பம் இப்போது அவர்களுக்கு உதவிற்று. ஹுசேன் நிஜாம்ஷாவின் துப்பாக்கிக் குண்டொன்று இராமராயன் மீது பாய்ந்தது.
குண்டுபட்டே இராமராயன் வீழ்ந்தானென்று சில வரலாற்றேடுகள் கூறுகின்றன. ஆனால் மேலே குறிப்பி ட்டபடி காயமுற்ற நிலையில் அவன் ஹுசேன் நிஜாம் ஷாவிடம் சிறைப்பட்டானென்றும், அலி ஆதில்ஷா வந்து அவன் உயிருக்கு மன்றாடக் கூடுமென்ற அச்சத்தாலேயே ஹுசேனால் கொல்லப் பட்டானென்றும் வேறு சில ஆதாரங்கள் குறிக்கின்றன.
அகமது நகர் அரசன் இராமராயன் தலையைத் துண்டித்து அதை ஓர் ஈட்டியில் குத்தி விசயநகரப் படை வீரர்களெல்லாருங் காண உயரத்தூக்கித் தன் வெற்றிக் கொடியாக நிறுத்தினான். இதற்கு முன் களம் பல கண்ட வீரர்கள், எத்தனையோ தோல்விகளை வெற்றிகளாக மாற்றி எக்காளமிட்ட படைத் தலைவர்கள் தோலா வீரனான தம் தலைவனின் துண்டாடப் பட்ட தலையைக் கண்டவுடனே தம்மை மறந்தனர்; தம் பேரரசின் பீடும் தம் மக்கள் வாழ்வின் வளமும் யாவும் அவர்கள் அகக்கண்களினின்று மறைந்தன. படைகள் மீகாமனில்லாத மரக்கலம் போல, மடையுடைந்த வெள்ளம் போல நாலா பக்கமும் சிதறியோடின.
1509-ஆம் ஆண்டு கிருட்டிண தேவராயனின் தீவானிப் போரில் புயல்மரபின் வீறாட்சியை மறந்திருந்த தென்னக இஸ்லாமிய மன்னர் குலைந்தோடும் விசயநகர்ப் படைகளைக்