பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

அப்பாத்துரையம் – 13

கண்டதே அம்மரபுக்குப் புத்துயிர் தந்தனர். களத்திலேயே ஓர் இலட்சம் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று வரலாற்றாசிரியர் பலரும் கூறுகின்றனர்.

பேரரசின் பெருங்கொடி மண்ணில் வீழ்ந்து புரண்டது.

படுகளம்

போர்க்களமாகத் தொடங்கிச் சூதாட்டக்களமாக மாறிய இராட்சசித் தங்கிடிப் புயல் இறுதியில் படுகளமாய், குருதிக் கடலின் வெள்ளப் பெருக்காய், தலைநகர் நோக்கிப் பல நெறிகளிலும் புகுந்து பாய்ந்தோடும் கானாறாயிற்று. உலகிலேயே வேறெந்த நகரமும் பெறாத செல்வ வளத்திலும் வெற்றிப் பெருமித வாழ்விலும் மிதந்திருந்த வெற்றித் திருநகரத்துக்குப் புயலின் செய்தியை அதன் பேரதிர்ச்சி தரும் விளைவின் தகவலை எடுத்துச் சென்றவர்கள் படுகளத்திலிருந்து தப்பியோடியவர்களில் முதல் தொகுதியினரே. களம் அடைந்த நிலையையே நாடும் நகரும் அடைந்தன. முன்பு களங்களில் கலங்கியோடிய இஸ்லாமிய வீரர் வாரக்கணக்காக, மாதக்கணக்காக எதிர்ப்பாரின்றி எங்கும் எல்லாம் சூறையாடினர். கொள்ளையடிக்க முன்வந்த படை வீரருக்கு மட்டுமன்றி அந்தச் சாக்கில் கொள்ளையடிக்க விரும்பியவர் கட்கெல்லாம் தென்னகத்தின் செல்வக்களஞ்சியம் திறந்த வீடாய் விட்டது. நகர மக்கள் தம் வாழ்வில் காணாத, கனவிலும் கேட்டறியாத சாத்துயருக்கு ஆளாயினர். கொள்ளையடிக்கத் துணிந்தவர்கள் தம் வாழ்வில் என்றும் கண்டறியாத, கேட்டறியாத செல்வக்குவை பெற்று, அதைச் சுமக்கமுடியாமல் சுமந்து மறுகினர்.

நாட்டையோ,நகரையோ எவரும் பாதுகாக்க முயன்றதாகத் தெரியவில்லை. நகரம் வார, மாதக்கணக்காகக் கொள்ளை யாட்சிக் கிரையாயிற்று. இராமராயன் இடத்திலிருந்து பேரரசு காக்க வேண்டிய பொறுப்புடையவன் அவன் இளவல் திருமலை. ஆனால் அவனோ பெயரளவில் இன்னும் பேரரசனாக இருந்த சதாசிவனையும் அரண்மனை மாதரையும் செல்வங்களையும் காத்தெடுத்துச் செல்லவே முற்பட்டான்.கொள்ளையாட்சி பரவு முன்பே அவன் 1550 யானைகள்மீது பேரரசின் அணிமணிகள், வெள்ளி பொன் செல்வக் குவைகள் ஆகியவற்றை வாரி ஏற்றிக்