பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

அப்பாத்துரையம் – 13

திருமலை பேரரசைக் கைக்கொள்ள முடிந்தது. இது மட்டுமன்று. பேரரசின் பிள்ளைகளாக அச்சுததேவராயன் காலத்துக்குள் பிறந்த செஞ்சி, தஞ்சை, மதுரை அரசுகள் இதற்குள் புதிய வல்லரசுடன் ஆகிவிட்டன. தன் மரபில் வந்த அந்தப் புதிய வல்லரசுகளுடன் இணங்கியும் பிணங்கியும் பேரரசு மேலும் ஒரு நூற்றாண்டுக் காலம் வாழமுடிந்தது.

பேரரசின் மரபு மறையுமுன், பேரரசை எதிர்த்தழிக்க முனைந்த தென்னகப் புயல்மரபுகளாக இஸ்லாமிய அரசுகள் ஐந்தினுள் மூன்று மறைந்துவிட்டன. பேரரசின் மரபு மறக்கப்படு முன்னரே, புயல்மரபில் மீந்த மற்ற இரண்டையும் தாய்ப் புயல் மரமாகிய முகலாயப் பேரரசு என்னும் பெரும்பாம்பு நெளிந்து வளைந்துவந்து விழுங்கத் தலைப்பட்டது.

சேய்ப்புயல் கடந்து தாய்ப்புயலோ, தாய்ப்புயல் கடந்து சேய்மைப் புயல்களோ கூட நீடு வாழ்வுறவில்லை. தென்னகத் தளர்ச்சிக் காலத்து நோய்க்கு மருந்தாகவே அமைந்த நச்சுச் சரக்காக அவை யாவும் அமைந்தன.