224
அப்பாத்துரையம் – 13
குமரியில் இப்பண்புகள் எல்லாவற்றையும் ஒருங்கே காண்கிறோம். முத்தமிழ்த் தெய்வமாகிய கன்னித்தாய் அல்லது குமரி இங்கே குமரிக் கோட்டின் மீது கோயில் கொண்டுள்ளது. கன்னிக்கோடு அல்லது குமரிக்கோடு என்ற தமிழ் மாமலையினின்று எழுந்து கன்னியாறாகிய குமரியாறு கன்னிமாநிலம் அல்லது குமரி மாநிலமாகிய பண்டைத் தமிழகத்தின் வழியே ஓடி,
ளமைமாறாக் கன்னித்தமிழ் மொழிவளமும் அதன் கன்னி இளம் பொங்கல் வளமும் பரப்பி, கன்னித் தென்றலிலாடி, கன்னிமாகடலாகிய குமரிப் பௌவத்தில் இன்றைய ஈழங்கடந்து நெடுந்தொலை தென் திசைக்கண் சென்று கன்னிக்கூடலாகக் கலந்தது.
ன்னகப் பண்பின் மையத் தளமான இக்குமரிக் கோட்டினின்று நெடுந்தொலை வடக்கு வடகிழக்காக விலகிப் பரந்து கிடக்கும் நிலம்தான் பண்டு கலிங்கமாநிலமென்று வழங்கிய தெலுங்க நாடு. ஆனால் மொழித் துறையிலும் சரி, பண்பாட்டுத் துறையிலும் சரி தென்னகப் பண்பிலிருந்து தொலை காரணமாக அது விலகி விட்டதென்று கூற இடமில்லை. வட எல்லையில் மேல் திசையில் கன்னடம் போலவே அதுவும் வாடையையும் வடதிசை வழிவந்த மேல் திசைப் புயலையும் எதிர்த்துக் கடும் போராட்டம் நடத்தி யிருந்தது. வாடையையும் புயலையும் ஒருங்கே எதிர்த்துக் கன்னடம் வடக்கில் நெடுந்தொலை கோட்டை விட்டிருந்த காலத்திலும், புயலுக்கு மட்டும் ஒதுங்கிய தெலுங்கம் கலிங்கத் திலும் அது கடந்து தமிழர் பண்டு வங்கமோட்டிய கடல் நிலமாகிய வங்கத்திலும் தென்னகப் பண்பு பரப்பியிருந்தது. மிகப் மிகப் பிந்திய காலத்தே வங்கத்தையும் அதற்குப் பிற்படக் கலிங்கத்தையும் அது கோட்டைவிட நேர்ந்த தாயினும், வடமேற்கு எல்லையில் தென்னகப் பண்பு பரவிய எல்லைதாண்டி நெடுந்தொலை வடக்கிலும் வடகிழக்கிலும் அது பரப்பியே உள்ளது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதென்ற பழமொழிப் படி அது புறநானூற்று வீரம் செறிந்து தேசீய இயக்கத்தின் அரசியல் மலர்ச்சிக்குரிய தாயகமாய்த் தென்னகத்தின் புத்துயிர்க் கருநிலமாயிற்று. பேரரசின் உச்சப்புகழ்க் காலத்தில் அதன் கால்வழியிலேயே சாளுவ மரபின் தேசீயச் சிற்பிகளும் பெருங்கல மீகாமர்களும் தோன்றினர். மேலும் தளர்ச்சிக் காலத்திலும்