பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

1227

ணைந்து வீரபத்திர நாயகன் என்ற படைத்தலைவன் உதவியுடன் சோழனை வென்றடக்கினர். சோழன் ஆண்ட பகுதியில் ஒரு பெருங்கூறான வடகரைப் பாளையம் வீரபத்திர நாயகனுக்குப் பரிசாக அளிக்கப்பட்டது.

விசுவநாத நாயகனுக்குப்பின் அவன் மகன் கிருட்டிணப்ப நாயகனும் அவன் மரபினரும் படிப்படியாக மதுரையில் அரச மரபினராகவே தன்னாண்மையுடன் ஆண்டனர். அரியநாத முதலியார் விசுவநாதன் ஆட்சி கடந்து அடுத்த இரண்டு தலைமுறை ஆட்சிகண்டு, மதுரை நாயகர் ஆட்சிக்கு உறுதுணை தந்தார்.

புயல் எழுவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பே 1564-இல் விசுவநாதன் ஆட்சி முடிவுற்று அவன் புதல்வன் கிருட்டிணப்ப நாயகன் மதுரைத் தவிசேறினான். புயலில் உதவும்படி மற்ற எல்லா மண்டலத் தலைவர்களையும் போலவே மதுரை நாயகனும் இராமராயனால் பணிக்கப்பட்டிருந்தான். மதுரையிலிருந்து அரியநாத முதலியாரே படை நடத்திச் சென்றதாகவும் அறிகிறோம். ஆயினும் அவர் போர்க்களம் சென்று சேருவதற்கு முன்பே புயல் களங்கடந்து கலவரம் பரப்பத் தொடங்கியிருந்தது. எனவே இராமராயனுக்குப் பின் பேரரசுப் பொறுப்பேற்றிருந்த திருமலை தலைமையிடத்தை விசய நகரத்திலிருந்து

பெனுகொண்டாவுக்கு மாற்றுவதற்கும், புயல் தெற்கும் கிழக்கும் பரவாமல் தடுப்பதற்கும் மட்டுமே அரியநாத முதலியார் படைகள் உதவியமையவேண்டி வந்தது. திருமலை நாயகனின் ஆட்சியில் அவன் காட்டிய அரசியல் திட்பநயத்துக்கும் ஓரளவு அரியநாத முதலியாரின் அரசியல் நுண்ணறிவும் அறிவுரையுமே காரணமாயிருந்திருக்கக் கூடும் என்று நம்ப இடமுண்டு. ஏனெனில் திருமலையின் போக்கு ஒரு புறம் பேரரசு சரியாமல் தடுத்து நிறுத்தித் தமிழக நாயக அரசுகளுக்கும் வலிமை தருவதாய மைந்தது.

கிருட்டிணப்ப நாயகன் (1564-1572) தன்னாண்மையுடனேயே மதுரை ஆண்டுவந்தான். மதுரைநாயக அரசின் நிறுவுதல் முதல்வனாக வரலாறு அவனையே சிறப்பிக்கிறது. அத்துடன் மதுரை அரசின் முதல்வனாக மட்டும் அவன் அமைந்துவிடாமல், விசயநகரப் பேரரசர் மரபிலும் பண்டைத் தமிழர் அரசர்