பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

(235

சூழ்ச்சிக்கு ஆளாகி அழிவுற்றாள். ஐந்தரசுகளுடன் மூன்றாவ தாகப் பாரீத் ஷாஹீகள் இருந்தாண்ட பீடாரும் இரண்டாம் வேங்கடன் ஆட்சிக் காலத்திலேயே 1609-இல் வடதிசைப் புயலுக்கு இரையாயிற்று. இவ்வாறாக, விசயநகரப் பேரரசில் வடபகுதி நலிவுற்ற பின்னும் தென்பகுதி புதுமலர்ச்சி பெற்றது போல, பகமனிப் பேரரசின் சிதைவுகளான ஐந்தரசுகளிலும் வட திசையிலுள்ள மூன்றும் அழிந்ததன் பின்னும் அரை நூற்றாண்டுக்கு மேலாக பீசப்பூர், கோலகொண்டா என்ற இரு ரு தென்திசை அரசுகளும் வீறுடன் வல்லரசுகளாக வாழ்ந்து புது மலர்ச்சி பெற்றன. ஆயினும் தம் புது மலர்ச்சியை விசயநகரத்தின் புதுமலர்ச்சிக் கெதிராகப் பயன்படுத்தியதனால் அவை விசய நகரத்தையும் அழித்துத் தாமும் அழியத் தாமே காரணமாய மைந்தன. விசயநகரம் வரலாற்று வானில் புகழொளி கான்று அடிவானை எட்டிய ஆண்டு 1672. அந்த ஆண்டிலேயே கோலகொண்டா வீழ்ச்சியுற்றது. பீராரும் அதன்பின் பலநாள் வாழவில்லை; ஒரு சில ஆண்டுகளுக்குள் தட்டுத்தடுமாறி1690-இல் அழிவு ஏற்றது.

தென்னகப் புயலை விழுங்கிய புயலான முகலாயப் பேரரசு கூட விசயநகர வீழ்ச்சியினால் பாதிக்கப்படத் தவறவில்லை.1707- லேயே அப்பேரரசு பொலிவிழந்து விட்டது.

மறுமலர்ச்சியுற்ற விசயநகரம் இரண்டாம் வேங்கடன் ஆட்சியிலேயே மறுமலர்ச்சி தொடங்கிய புயலரசுகளுடன் மோதத் தொடங்கிற்று என்னலாம்.

கொண்ட வீட்டுப் பகுதியில் வேங்கடன் கோலகொண்டா ா அரசனுக் கெதிராகக் கிளர்ச்சி தூண்டி வந்தான். இதற்கு எதிர் செயலாகக் கோலகொண்டா அரசன் கடப்பை, அனந்தப்பூர்ப் பகுதிகளில் கிளர்ச்சிகளுக்குத் தூபமிட்டதுடன் பெனுகொண்டாக் கோட்டையையும் தாக்கினான். நேரடியாக உடனே இதனைச் சமாளிக்கும் ஆற்றல் இல்லாத நிலையில் வேங்கடன் பணிந்து சமரச ஒப்பந்தம் செய்து கொண்டான். ஆனால் இவ்வொப்பந்தத் தால் கிடைத்த ஓய்வை அவன் நன்கு பயன்படுத்தித் தன்னை முற்றிலும் வலுப்படுத்திக் கொண்டு மீண்டும் போர்க்கெழுந்தான்.

இத்தடவை வேங்கடன் கைகளே மேலோங்கின. குத்தி, கண்டிகோட்டை முதலிய இடங்கள் அவன் கைவசப்பட்டன.