பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

237

அக்கோட்டை வீழ்ச்சியுற்றது. எஞ்சிய காலமுழுவதும் கிருட்டிண மராயன் சந்திரகிரிக்கோட்டைச் சிறையில் கழித்தான்.

ஜம்புலமதுகுப் போரில் 1598-இல் தலைக்காவிரியாகத் தொடங்கிய வீரயாசம நாயுடுவின் புகழாறு உத்தரமேரூர்ப் போர் (1601), மின்னல்போர், வேலூர்ப் போர் (1603), செங்கற் பட்டுப் போர் (1608), தோப்பூர்ப் போர், பாளையங்கோட்டைப் போர் (1617) ஆகிய எண்ணற்ற வெற்றிப் பேராறுகளுடன் கலந்து அகன்ற காவிரியாய்த் தென்னகப் புகழில் கலப்புற்றது.

வேங்கடன் ஆட்சியில் அடுத்தபடியாகக் கிளர்ச்சிக் கெழுந் தவன் இராமராயன் வீரஇளவல் வேங்கடபதியின் பெயரனான கந்தனவோலு கோபாலராயன் என்பவன். தனக்கு உண்மையான பெருமக்கள் பலரின் உதவியுடன் வேங்கடன் அவனைக் கீழடக்கி, அவன் பெருஞ்செல்வங்களை அப்பெரு மக்களிடையே பகிர்ந்து கொடுத்துத் தன்னை வலுப்படுத்திக் கொண்டான். இங்ஙனம் புது வளர்ச்சியடைந்த குடிகளுள் பேரம்பேட்டில் முன்பே நிறுவப்பட்டிருந்த யாசமநாயுடுவின் வேலுகொடி மரபும் ஒன்று. அடுத்த மாபெரும் கிளர்ச்சிப் போராட்டத்தில் வேங்கடனுக்குப் பேருதவியாயிருந்தது.

து

வேலூரிலாண்ட லிங்கமன் எழுச்சி கிளர்ச்சி என்ற பெயரின் எல்லைதாண்டிப் பேரரசின் எல்லையளாவிய ஒரு பெரும் போராட்டமாக வளர்ந்தது. அவன் பல தலைவர்களைத் திரட்டிக் கொண்டு பேரரசுக்கு எதிராகப் போர் தொடுக்கவே முனைந்தான். அவன் துணைவர்களுள் வலிமைமிக்கவன் உத்தரமேரூர்க் கோட்டையாண்ட நாகன் என்பவன். போராட்டத் தொடக்கத் திலேயே வீரயாசம் நாயுடு அவனை முறியடித்து உத்திரமேரூர்க் கோட்டையைக் கைப்பற்றினான்.நாகன் கோட்டையை விட்டே ஓடி லிங்கமனிடம் அடைக்கலம் புகுந்தான். அதை மீட்கும் பணியில் லிங்கமன் தான்மட்டும் தனித்து நின்று உதவத் துணியவில்லை. தனக்குத் துணை நிற்கும்படி மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய தமிழக முழுவதுமே கடலாகப் பொங்கியெழுந்த இவ்வூழிப் பெரும் படைக்கு நாகநாயகனின் மைத்துனனான தாவுள பரப்பய்யாவே படைத் தலைவனானான்.

உத்தரமேரூரில் 1601-இல் நடந்த மாபெரும் போராட்டத்தில் யாசமநாயுடு முகிற்கூட்டங்களிடையே விளையாடும் மின்னற்