வெற்றித் திருநகர்
(243
சார்பில் அரசுரிமைப் போராட்டம் நடந்த கால முழுவதும் அவன் ஆட்சியாகவே கொள்ளப்படுகிறது. ஆனால் அந்தப் போராட்டம் இராமதேவன் (1618-1630) ஆட்சித் தொடக்கத்தில் வேகம் குறைந்ததேயன்றி முடிவுற்றுவிடவில்லை. ஜக்கராயன் இளவலான எதிராசன் போரை விடாது நீடித்தே வந்தான். ஆயினும் 1619-இல் போலி இளவரசன் இறந்துவிட்டதனால் அப்போராட்டத்தில் தயக்கமட்டுமன்றித் திடீர்த் திசை மாறுதலும் ஏற்பட்டது.
இனி போரை நடத்துவதில் பொருளில்லையென்று கண்ட எதிராசன் பேரரசனுடன் சமரசம் செய்து கொண்டான். பேரரசனும் அவனிடம் நேசம் காட்டி அவன் புதல்வியை மணந்து கொண்டு அவனுடன் ஒன்றுபட்டான். ஆனால் இந்தச் சுமூக முடிவு யாசம் நாயுடுவுக்கு மட்டும் மனக் கசப்பை அளித்தது. ஏனெனில் போரின்புகழ் வெற்றிகளுக்குப் பரிசாக அவன் கொப்பூரிகுடியின் செல்வத்தையே எதிர்பார்த்திருந்தான். அக்குடி புத்துயர்வு பெற்று நட்பானது கண்டு, தன் துணையாலேயே தவிசேறிய பேரரசனை அவன் எதிர்க்க முற்பட்டான்.
அரசுரிமைப் போராட்டம் எதிர்பாராத முறையில் திசைமாறி அரசியல் போராட்டமாயிற்று. ஆனால் புது வலிமை பெற்றிருந்த இராமதேவன் அவனை எளிதில் அடக்கினான். வீரயாசம் நாயுடு பல்லாயிரங் களங்களில் போராடி மயிரிழை நெருக்கடிகளினின்றும் சாவினின்றும் இளமைக்கால முழுதும் காத்துத் தவிசேற்றிய இப்போது அவனுக்கு இறுதித் தோல்வியையும் அழிவையும் பரிசாகத்தந்தது. ஆனால் வாழ்வில் அந்தக் குழந்தையோ, அதன் ஆதரவு பெற்ற எவரோ என்றும் பெற முடியாத புகழ்ப்பரிசை மக்கள் உள்ளங்களிலும் கலைப் படைப்புக்களிலும் வீர யாசம நாயுடு பெற்றான்.
ஆடுகள் எத்தனை எத்தனை சேரினும் அடல்கொளும் புலியேற்றுக் கீடாகுமோ? கூடுஜக்கர்கள்கோடி, எழுபது
கோடி - மக்கர்கள் ஏழொடேழ் கோடியா
நாடும்நாயக ராயர்கள் சேரினும்
நீடுவெங்கள நாயகன் யாசமன்