பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

அப்பாத்துரையம் – 13

அரசுகளின் சார்பிலே கடமையாற்றினாலும், தென்னகத் தேசீயத்தில் இழைந்து புது மலர்ச்சிக் கனவுகண்ட மராத்திய தேசிய வீரன் ஷாஜியின் ஒளிதிகழ் வண்ணப்புதல்வன் சிவாஜி பேரரசனின் கடைசிப் பேரரசுப் பீடத்திலேயே அமர்ந்து, அப்பேரரசின் பெயராலேயே தன்னைக் கருநாடகப் பேரரசன் என்று முடிசூட்டிக் கொண்டான். இம்முறையில் தமிழகத் தேசீயத்தைத் தன் வாழ்வில் தென்னகமளாவப் பரப்பிய பேரரசின் புகழ் அதன் மாள்வுக் காலத்துக்குள் தென்னக எல்லை கடந்து வடதிசையிலேயே ஒரு புதிய தேசீயத்திலும் சென்று பரவியது.

மராத்திய புத்திளந் தேசீய எழுச்சிக்குரிய கதிரவனான சிவாஜி வேலூர் முற்றுகையில் பங்குகொண்டு பேரரசன் வெளிச் செல்ல அனுதாபத்துடன் உதவிய ஷாஜியின் மைந்தனே என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னகம் கடந்து பொங்கிப் பரவிய இத்தேசீயமே, நிலப்பரப்பில் சுவறிய வளத்தை உள்ளார ஊற்றாகச் செலுத்தி விடாயுடையோர் நாட மேலெழுப்பி வழங்கும் பாலாறு போல, இருபதாம் நூற்றாண்டில் தென்னகப் புத்திளங்குரல் கேட்டுப் புத்துயிர்ப் படைத்துக் கிளர்ந்துள்ளது என்னலாம்.