பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

259

உரிமையின்படி அப்போதும் செயல்வாரியங்கள் (Committees) செப்பணிகள் (Services) ஆகியவற்றுக்கு ஆட்சியாளர் தேர்வுகள் நடத்தப்பட்ட துண்டு. ஆனால் இது செயல்வகைக்கன்றி உரிமைக்கன்று, தவிர, தகுதி திறமை தேவைப்பட்ட இத்துறையில் கூட, தேர்வுப் போட்டிக்கு இடம் தரப்படவில்லை. தகுதியுடைய அனைவருக்கும் தேர்வு முறையாகக் கிட்டத்தக்க வகையில், அவர்களிடையே மொழி யெண்ணிக்கைக்கு மாறாக, குலுக்கி யெடுப்பு அல்லது திருவுளச் சீட்டுமுறையே கையாளப்பட்டது.

இப் பழங்குடியாட்சியிலும் சில குறைகள் இருந்தன. அது ஆட்சியுரிமை பெற்ற இனங்களுக்கு வெளியே செயலாற்ற வில்லை. அயலினங்கள் பலபடி அடிமை நிலைக்குரியதாக்கப் பட்டு, உரிமைகள் படிப்படியாகக் குறைந்து கூடி வந்தன. அத்துடன் இனங்களுக்கிடையே போரின் வெற்றி தோல்விகள், முடியாட்சிமுறை, பேரரசாட்சி முறை, பிற ஆண்டான் அடிமை முறைகள் ஆகியவை தோன்றி வளர்ந்தபின் ஆட்சி எல்லைகள் தான் விரிவடைந்தன. ஆட்சிப்பண்பு சீர்கெட்டது. இச்சீர் கேடுகளின் பயனாக ஏற்பட்ட முடியாட்சி, பேரரசாட்சி, இனவேற்றுமை, வகுப்பு வேற்றுமையடிப்படையில் அமைந்த புதுக்குடியாட்சி, வல்லாட்சி ஆகியவற்றிலும் பழைய குடியாட்சி முறைகள் நீடித்தன. ஆனால் திருவுளச் சீட்டு முறை மொழி எண்ணிக்கையாக மாறிற்று. தேர்வு செயற் பணிகளுக்கு மட்டுமன்றி ஆட்சியுரிமைக்கும் தொடரப்பட்டது.இரண்டாவது குடியாட்சி ஏற்பட்ட வகை இதுவே.

நம்காலப் பேராண்மைக் குடியாட்சியில் மரபுகள் யாவும் பழய குடியாட்சி சார்ந்தவை. ஆனால் அவற்றின் பண்புகள் பழயகுடியாட்சி மரபுகளுக்குரிய இனப்பண்புகள் அல்ல. இடைக் காலத்தில் வளர்ந்த முடியாட்சி, வல்லாட்சி, பேரரசாட்சி ஆகியவற்றின் பண்புகளே. இதனால் இனத்தின் அன்புப் போட்டியை அது தன்னலப் போட்டியாகவும், இனத்தின் அன்புக் கூட்டுழைப்பை தன்னலக் குழுக்களின் கூட்டுச் சதியாகவும், வளர்ச்சித்திட்ட அமைப்பைச் சூதாடிகளுக்குரிய குருட்டு வாய்ப்பு வேட்டையாகவும் மாற்ற நேர்கிறது. நலங்களைப் பெருக்கும் திட்டமுறையாக அமைவதற்கு மாறாக, அது தீங்குகளைக் கூடியமட்டும் குறைக்கும் தடுப்பு முறையாக