260
மட்டுமே இன்று இயல்கிறது.
அப்பாத்துரையம் - 13
சங்ககாலத்துக்கு நெடுநாள் முற்பட்டே தமிழகத்தில் நேர் குடியாட்சி மறைந்து அவற்றின் சின்னமாகக் குடியரசர் ஆட்சிகள் நீடிப்பது காண்கிறோம். இம்மாறுதல் தமிழகத்தில் ஏற்பட்டபின் தென்னகத்திலும், தென்னகத்தில் ஏற்பட்டபின் சிந்துகங்கை சமவெளியிலும் சிந்து கங்கை சமவெளியில் ஏற்பட்டபின் அகல் உலகிலும் நீடிப்பது காண்கிறோம். தமிழக, தென்னகத் தேசியங்கள் இன அடிப்படை மீதே வளர்ந்த முடியரசுகளின் விரிவான பேரரசுகளின் செயல்களே என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆனால் இது தமிழகத்தின் நிலைமட்டுமன்று உலக முழுமையும் பழய நேர்குடியாட்சியிலிருந்தோ சற்று முற்பட்டோ பிற்பட்டோ தமிழகத்தினைப் பின்பற்றி இதே நிலையை நாளடைவில் அடைந்துள்ளது.
-
தமிழகத்திலும் உலகிலும் சென்ற மூவாயிரம் ஆண்டு களாகப் பரவிவரும் பேராண்மை ஆட்சி ஊழியில் குடியரசுகளை விடமுடியரசுகள், பேரரசுகள், வல்லரசுகள் ஆகியவையே தேசீய வளர்ச்சிக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியுள்ளன என்பதில் ஐயமில்லை. இதன் சின்னமாகவே முதலில் தமிழகத்திலும் பின் படிப்படியாக மற்றப் பரப்புக்களிலும் பழய மக்கட்படைகள் அல்லது குடிப்படைகள் (People's Army or Milita) நிலைப் படைகளாக (Standing Army) எங்கும் மாறி வந்துள்ளன.
சங்ககாலத்துக்குள்ளேயே தமிழகத் தேசீயம் தமிழகம் கடந்து உலகளாவி விட்டதானாலும், அது குடியரசர் ஆட்சிகளை அதாவது சிறுநில ஆட்சிகளைச் சூழ்ந்து பரந்து உள்ளடக்கிச் சென்றதேயொழிய, அவற்றைச் செரிமானம் செய்துவிடவில்லை. தமிழரசர்,பேரரசர் நிலப்படைகள் இக்குடியாட்சிப் பண்புகளை உலகளாவப் பரப்ப மட்டுமே உதவின. ஆனால் இதுகூடச் சங்ககாலங்களுக்குப் பின் வந்த பாண்டிய பல்லவப் பேரரசர் சோழ பாண்டிய பெரும்பேரரசர் ஆகியோரின் அகல்விரிவான செல்வப் பேரரசாட்சிகளுக்கு நிலையாக வலிமையளிக்க முடியவில்லை. விசயநகரப் பேரரசு தமிழக மரபில் வந்த நிலப்படைகளை மட்டுமன்றி வடதிசைப் புதுவரவான பண்ணை நிலப்படை (அமரம் படை) முறையையும் மேற்கொண்டது. கடற்படையிலும் அவர்கள் கருத்துச் செலுத்தவில்லை. இந்த