பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

261

இரண்டும் மைய ஆட்சித் துறையில் விசயநகரப் பேரரசைத் தமிழகப் பேரரசுகளைப் பார்க்கிலும் வலிமை குறைந்ததாகவே ஆக்கியிருந்தன. ஆயினும் அதன் உண்மையான வலு முன்னைய அரசு பேரரசுகளை விட எவ்வகையிலும் குறையவில்லை, கூடியேயிருந்தது என்பதைப் பேரரசின் நீடித்த வரலாறும் வெற்றிகளும் காட்டும். இதற்குரிய காரணம் அது புதிதாகத் தேசீயம் அளாவிய பேரரசு என்பதே. சோழப்பெரும் பேரரசின் மைய நாட்களில் இராசராச சோழனும் குலோத்துங்கசோழனும் சிறப்பாகக் குலோத்துங்க சோழன் பேரரசின் எல்லையில் இந்தத் தேசீயப் பண்பின் வலுவை நன்குணர்ந்து அதற்கு அடித்தள மிட்டிருந்தனர். விசயநகரப் பேரரசரும் அவர்கள் கட்டுப்படுத்திய தேசீய எல்லையிலேயே தம் பேரரசின் விரிவை நிறுத்த, அத்தேசீய வலுவால் அதை நீடித்த வாழ்வுடைய ஒரு கோட்டையாக்கியிருந்தனர்.

-

டி

பேரரசுப் பண்புகளில் தமிழகம் தேசீய உச்சநிலையை எட்டி அதனை விசயநகர காலத்துக்கு மரபுரிமையாக விட்டுச் சென்றிருந்தது. ஆனால் குடியாட்சிப் பண்புகள் விசயநகரப் பேரரசே முழு அளவில் வளர்த்து வருங்காலப் புதுமலர்ச்சித் தேசீயத்துக்கு மரபுரிமையாக விட்டுச் சென்றுள்ளது என்னலாம்.

மனித உலகு குடும்பம், சமுதாயம், நாடு ஆகிய எல்லைகள் தாண்டி எவ்வளவோ தொலைவு வளர்ந்துள்ளது. ஆயினும் அது ஒரே பேரினம், பெருங்குடும்பம், குலம் என்ற கருத்தை முப்பால் முதல்வர் குறிக்கோள் வழி சங்க இலக்கியம் பண்பாகப் பேணிய அளவில் அது மனித இனத்தில் பரவி விடவில்லை. ஒரு வீடு, அதில் இன்ப வாழ்வு நாடும் ஒரு குடும்பம். அதனை இயக்கி நடத்தும் தலைவரான ஒரு தந்தை தாய் என்ற முறையிலேயே, உலகை ஒரு பெரிய வீடாகவும், அதில் பேரின்ப நாடும் மனித இனத்தை ஒருபெருங் குடும்பமாகவும், அதனை இயக்கி நடத்தும் ஒரு தலைவராகக் கடவுளையும் தமிழர் குறிக்கொண்டிருந்தனர்.

தற்கால மேலையுலகினர் அரசியல் துறையிலேயே மனித இனத்தை ஓர் உலகாக்க, ஒரு பெருநாடாக்கக் கனவு காண்கின்றனர். ஆனால் இதை நோக்கி முன்னேறுவதற்குக்கூட எங்கும் அரசியல் தடைகளும், கீழ்திசையிலும் தென்னகத்திலும் சமய, சமுதாய, பண்பாட்டுத் தடைகளும் மிகப் பலவாயுள்ளன.