பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

265

அரும்பெரும் பண்புகளைத் தமக்குள் அடக்கிக் கொண்டுள்ளன. நாட்டின் மறுமலர்ச்சிச் செல்வர்கள் இச்செல்வக் குவைகளின் திசையில் கருத்துச் செல்லுவார்களாக!

காலங் கடந்து வேர்பாய்ச்சிக்

கணுவார் கிளைகள் திசைபோக்கி

ஞாலங் கடந்து பண்போச்சி,

நலமார் திறங்கள் மலர்வித்துச்

சீலங் கடந்து தேசீயச்

செல்வங் கனிவித் தெழிலார்ந்த

கோலம் படைத்த கோவாழ்வின் குன்றாம்விசய நகர்வாழி!