வெற்றித் திருநகர்
ெ
9
பேரரசும் பெரு நகரும் விசயநகரம் அல்லது வெற்றித் திருநகரம் என்ற ஒரே பெயராலேயே இயங்கின. அவற்றின் இன்றியமையாத நெருங்கிய தொடர்பை இது சுட்டிக் காட்டுகிறது. மற்றப் பெரு நகர்களைப் போல அது பல அரசுகள், பேரரசுகள் கண்டதில்லை. ஒரே பேரரச வாழ்வை ஒட்டிப் பிறப்புற்று, அது அப்பேரரச வாழ்வுக்காகவே வாழ்ந்து, அதன் புகழுடன் தன் வாழ்வை முற்றிலும் இணைத்துவிட்ட தென்னகமளாவிய புகழ்ப் பேரரசாக நிலவிய கால முழுவதும், பேரரசும் வெற்றித் திருநகரையே தலைநகராகக் கொண்டிலங் கிற்று. திருநகரின் பெயரையே பேரரசு என்றும் தன் பெயராக ஏற்றமைந்ததென்பதும் திருநகரின் ஏற்றத்துக்கு ஒரு சான்று ஆகும்.
வெள்ளத்தின் வாழ்வுடன் வாழ்ந்து, வளமெய்தி, அது வற்ற வற்றத் தானும் வாடி வதங்கி மடியும் இயல்புடையது செந்தாமரை மலர். பெருநகர் வாழ்வு இச் செந்தாமரை மலரின் வாழ்வை ஒத்தது என்னல் பொருந்தும். ஏனெனில் அது பேரரச வாழ்வுடன் வாழ்ந்து, அதன் புகழ் வளர்ச்சியுடன் தானும் வளர்ந்தது. ஆனால் பேரரசு பொன்று முன்னே, அதன் புகழ் சரியத் தொடங்கிய வுடனே அதுவும் சரிவுற்றது. கொண்டானை யல்லால் அறியாக் குலக்கொடி போல, அது பேரரச வாழ்வு ஒன்றனுக்காகவே பிறந்து, அது ஒன்றனுக்காகவே வாழ்ந்து வளர்ந்து, அது தளர்வுறுமுன் தானே மங்கி மடிவுற்றது.
சு
சவ
உலக வாழ்வில் உரோம் நகர் ஒன்றன்றி வேறெந்த நகரமும் காணாத அரும்புகழை வெற்றித் திருநகர் தன் இரண்டு நூற்றாண்டுக் கால வாழ்வுக்கும் கண்டது. அத்துடன் வேறு எந்த நகரமும் - அந்த உரோம் நகர்கூட முற்றிலும் பெறாத நிலையில் - அது தேசீயப் பேரரசின் வாழ்வையும் வரலாற்றையும் தன் வாழ்வாகவும் வரலாறாகவும் கொண்டியங்கிற்று.
வணிகம்
தமிழகத்தில் நாலாயிர ஆண்டுகட்கு முன் உவரியும், இரண்டாயிர ஆண்டுகட்கு முன் கொற்கையும் காவிரிப் பூம்பட்டினமும் உலக வாணிகக் களங்களாய் நிலவின. வெற்றித் திருநகர் இவற்றைப் போலக் கடற்கரை நகரம் அன்று. ஆயினும் அது தமிழகத்தின் உவரிபோல, கொற்கைபோல, பூம்புகார்ப்