பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

11

காலமும் ஆகும். தென்னகத்தின் தாழ்வகற்றும் மலர்ச்சி தொடங்கிய போதும், பேரரசு பெருநகர் வாழ்வே அம் மலர்ச்சியில் மிதந்து முதலிடம் பெற்றது. ஏனெனில், பேரரசு, பெருநகர் ஆகியவற்றின் புகழ் மலர்ச்சியே தேசீயப் புதுமலர்ச்சிக்கும் வழி வகுத்தது.

பேரரசு பெருநகர் ஆகியவற்றின் தேசீயப் பண்பை இத்தொடர்பு வலியுறுத்திக் காட்டுகிறது.

-

ன்

டாது

வரலாற்றில் 14-ம் நூற்றாண்டின் முற்பாதியிலே ஒரே ஆண்டிலே, ஒரே நாளிலே கிட்டத்தட்ட ஒரே கணத்திலேயே - பேரரசும் பெருநகரும் ஒருங்கே பிறப்புற்றன. பெயரளவில் பேரரசு 17-ம் நூற்றாண்டு வரை நிலவினாலும் 16-ம் நூற்றாண்டி பிற்பகுதியில் வீசியடித்த ஒரு தென்னகப் பெரும்புயலில் அதன் பீடும் பெருமையும் சரிவுற்றன. பேரரசு சரியத் தொடங்கிய பின் நகர வாழ்வு ஒரு நாள் கூட அமைந்து நிலை கொள்ளவில்லை. அழிவுப்புயல் தென்னக வாழ்விலும் பேரரசு வாழ்விலும் ஒருநாள் வீசியடித்ததென்றால், நகர வாழ்வில் அது இடைவிட நாட்கணக்காக, வார, மாதக் கணக்காகச் சுழன்றடித்தது. நகரம் அதினின்றும் என்றும் மீளவில்லை. வரலாற்றில் அது மீண்டும் என்றும் தலைதூக்காமல் மடிந்து மறைந்தது. ஆனால் மாண்டது நகரமோ, நகர வாழ்வோ மட்டுமல்ல. அது பற்றிய நினைவே மக்கள் உள்ளத்திலிருந்து நீண்ட, கிட்டத்தட்ட நிலையான விடை கொண்டு சென்று விட்டது. மண்ணில் மட்டுமன்றி, மக்கள் உள்ளத்திலும் அது மறதியின் ஆழத்தில் புதையுண்டு போய் விட்டது.

பேரரசையும் பெருநகரையும் தென்னகம் கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளாக, 16 முதல் 20-ம் நூற்றாண்டின் தாடக்கம் வரை முற்றிலும் மறைந்திருந்தது. அந்நாட்களில் தென்னக மெங்குமுள்ள பாரிய கோயில்கள், வானளாவிய கூடகோபுரங்கள் ஆகியவற்றைக் கண்டு மக்கள் வியந்து போற்றாமலில்லை. ஆனால் அவற்றைக் கட்டியெழுப்பிய சிற்பிகள் யார் என்பது பற்றி அவர்கள் சிந்தித்ததே கிடையாது. விசயநகரப் பேரரசர் கீழிருந்தாண்ட மண்டலத் தலைவர் மரபினரே பல நூற்றாண்டுகளாக அரசர், வல்லரசராக விளங்கினர். ஆனால் அவர்கள் தங்கள் மூலமரபின்