18
அப்பாத்துரையம் – 13
தங்கச் சிலைகள் முதல் மணிக் கம்பளங்கள் வரை எல்லா வகைப்பட்ட மதிப்புக்குரிய பொருள்களும் இருந்தன. அவற்றிலிருந்து அவன் அலாவுதீன் முன்னிலையில் கொண்டு வந்து காணிக்கையாக அளித்த பொருள்களின் அளவினை மட்டும் இஸ்லாமிய வரலற்றாசிரியர்கள் நமக்குக் குறித்துச் சென்றுள்ளனர். 312 யானைகள், 26,000 குதிரைகள், அவற்றின்மீது ஏற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்ட முத்து மணியணிகள் நிறைந்த பன்னூறு பேழைகள் ஆகியவற்றுடன், தங்கமாக 96,000 மணங்கும் பேரரசனிடம் ஒப்படைக்கப் பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
க்காணிக்கையில் தங்கத்தின் அளவை மட்டும் மதிப் பிட்டுக் காண முயன்ற வரலாற்றறிஞர் உண்டு. தற்கால வழக்கின்படி ஒரு மணங்கு அல்லது மனு என்பது அகமது நகரில் 163 1/4 பிரிட்டிஸ் கல்லெடையும், சென்னை நகரில் 25 கல்லெடையும், திருவாங்கூரில் 19 கல்லெடையும் உடையது.மிகக் குறைந்த திருவாங்கூர் மதிப்பின்படியே பார்த்தால் கூடத் தங்கத்தின் அளவு 18 இலட்சம் கல்லெடையும் நடு அளவான சென்னை மதிப்பின்படி 24 லட்சம் கல்லெடையும் ஆகின்றது. இவையே அராபிக் கதைக்குரிய கற்பனை அளவுகளாகத் தோன்றுகின்றன. ஆனால் இம்மதிப்பைத் தந்துள்ள வரலாற்றாசிரியரான பெரிஷ்டா அகமது நகருக்கே உரியவராதலால், அவர் தரும் எண்ணின் மதிப்பு அகமது நகருக்கே உரியதாக வேண்டுமென்று அறிஞர் சீவெல் கருதுகிறார். அதன்படி தங்கமதிப்பு ஒன்றரைக் கோடிக்கு மேற்பட்ட கல்லெடை ஆகிறது.
விசய நகர காலத் தொடக்கத்துக்குரிய தென்னக வளத்தை முழுவதும் இந்தத் தங்கம் குறித்துக் காட்டுவதாக எவரும் கொள்ள முடியாது. இது பெரிதும் தென்னகத்தின் ஒரு பகுதியாகிய பாண்டிய நாட்டில் கோயில்களில் கொட்டிக்கிடந்த செல்வத்தின் ஒரு கூறு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கக் காலத்துக்குரிய இந்தச் செல்வ நிலை விசய நகர கால முழுவதும் குறையாது வளர்ந்தே வந்தது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இதற்கு இருநூறு ஆண்டுகள் கழித்துத் தென்னகப் பெரும்புயலில் விசயநகரப் பேரரசு சரிந்தபோது