வெற்றித் திருநகர்
19
பேரரசின் தலைமையேற்ற திருமலை பேரரசருக்குரிய தனிச் செல்வக் குவைகளை மட்டும் 1550 யானைகளின் மேலேற்றிச் சென்றான் என்று அறிகிறோம்.
அந்நாளைய தென்னகத்தின் பெருஞ்செல்வ வளத்துக்குரிய காரணத்தை உலகப் பொதுவுடைமை இயக்கத்தின் மூல முதல்வரான உலகப் பேரறிஞர் கார்ல் மார்க்ஸ் விளக்கிக் காட்டுகிறார். தென்னகம் கி. பி. 14-ஆம் நூற்றாண்டுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னிருந்தே வாணிக முதலாளித்துவப் படியில் ஓங்கி உலகின் வாணிக மையமாய் இலங்கிற்று. உலகக் கைத்தொழில்களும், உலக வாணிகமும் தென்னகத்தை நடு அச்சாகக் கொண்டே சுழன்றியங்கின. உலக வாணிகத்தில் இடையீட்டு வாணிகமாகவும் இருந்ததால் உலகின் செல்வக் குவைகள் பெரிதும் தென்னகத்திலேயே வந்து செறிந்து குவிந்து கிடந்தன. இப்பெருஞ்செல்வத்தின் ஒரு சிறு சேமப் பகுதியே தென்னகத்தின் கோயில்களில் சென்று இன்றுவரை தேங்கிக் கிடக்கின்றது. ஆனால் தென்னக மன்னர் செல்வக் குவைக்கு இது மட்டும் காரணமன்று. அரசருக்கு இறையூதிய மளித்த பெருந்தொழில்கள் பல தென்னகத்தின் தனிப்பெருஞ் சிறப்பாக அந்நாளில் இயங்கின. இலங்கையில் மாணிக்க வயல்கள், பாண்டி நாட்டில் முத்து வயல்கள், விசயநகர ஆட்சிக்கு உட்பட்டிருந்த கோல்கொண்டாவடுத்த பகுதிகளில் வைர வயல்கள் ஆகியவை இவற்றுட் குறிப்பிடத்தக்கவை. இவை அரசர், பேரரசரால் குத்தகைக்கு விடப்பட்டு, குத்தகை ஒப்பந்தத்தின்படி தங்கத்தின் பெருங்கூறும், முத்து மாணிக்க வைரங்களில் குறிப்பிட்ட பருமன், எடைகட்கு மேற்பட்டவை களும் அரசினுக்கே உரியவையாயிருந்தன.
உலகின் முத்துச் செல்வ வளத்தில் ஒரு பாதி பாண்டிய அரசன் உடல் மீதே கிடந்தது என்றும், உலகின் வைர ச் செல்வத்தில் ஒரு பாதிக்கு மேற்பட்ட அளவு விசய நகரப் பேரரசர் உடல் மீது பட்டக்குதிரை அணி மணி மீதுமே கிடந்தது என்றும் அந்நாளைய வரலாற்றாசிரியர் பலர் நமக்குச் சான்று தெரிவிக்கின்றனர்.
14 முதல் 16-ஆம் நூற்றாண்டுவரையும், அது கிடந்து ரண்டு நூற்றாண்டளவும் கூட, உலகத்தின் மிகப் பெரிய