22
அப்பாத்துரையம் – 13
விசயநகரம் ஒரு குறுகிய சமயச்சார்பான பேரரசு அன்று, முழுநிறை தேசீயப் பேரரசேயாகும். சமயம் தேசீய வாழ்வின் பல கூறுகளுள் ஒன்று. இந்து மதமோ சமய வாழ்விலும் ஒரு கூறு. எனவே விசயநகரத்தை இந்துமதப் பேரரசு என்று கூறுவது அதன் தேசீயப் பெருமையை மிகவும் குறுக்கிக் காட்டுவது ஆகும். தவிர, விசயநகரப் பேரரசின் தேசீயத்துக்குரிய பல திறப் பெருமைகளில் ஒரு கூறாகச் சமய வாழ்வையும் அதன் ஒரு பகுதியான இந்து மதத்தையும் மட்டுமே எடுத்துக் கொண்டால் கூட, 'இந்துமதப்' பேரரசு என்ற தொடர் பேரரசுக்கும் இந்து மதத்துக்கும் உள்ள மெய்த்தொடர்பைப் பொய்ப்பித்துக் காட்டுவதாகும். ஏனெனில் இந்து மதம் என்ற பெயரும் அப்பெயரால் குறிக்கப்படும் சமயப் பேரரசினால்தான் படைத் துருவாக்கப்பட்டன. எனவே பேரரசை ‘இந்து மதப் பேரரசு’ என்பதை விடப் ‘புதிதாக இந்து மதத்தைப் படைத்து உருவாக்கிய பேரரசு' என்றோ, 'இந்து மதத்தின் தாய்' என்றோ கூறுவதுதான் பொருத்தமாகும்.
தென்னகத்திலும் அதன் இன நாகரிகத் தடங்கள் பரவிய சூழ்புலங்களிலும் மிகப் பழங்காலத்திலிருந்தே சைவம், வைணவம், புத்தம், சமணம் போன்ற மக்கட் சமயங்களும், உலோகாயதம், சாங்கியம், நியாயம், வைசேடிகம், யோகம், ஒரு கடவுட் கோட்பாடு முதலிய அறிஞர் அறிவுக் கோட்பாடுகளும், வேதநெறி, வேள்வி நெறி, சுமார்த்த வருணாசிரம நெறி முதலிய அயலினப் புரோகித நெறிகளும் தனித்தனி இயங்கி வந்துள்ளன. இவற்றுள் முன் இருவகையும் நெடுநீள் காலமாக ஒரே இனப்பரப்பில், ஒரே தேசப் பரப்பில் தோன்றி, ஒரே இன நாகரிகத்துடன் வளர்ந்தவை. ஆதலால் தம்மையறியாமலே அவை தம்முள் விரவி ஒரே அடிப்படை ஒற்றுமை பெற்றன. அத்துடன் தம்முள் போட்டியிட்ட வண்ணமே அவை தம்மையுணராமல் ஒரே திசையில் வளர்ந்து வந்தன. எனினும் மூவேறு தளங்களில் இயங்கிவந்த இந்த மூவேறு தொகுதிகளையும் ஒரே முப்புரியிழையாக்கி, அதற்கு ‘இந்துமதம்' என்ற பெயர் கொடுத்த செயல் விசயநகரத்துக்கும், அதன் காலச் சூழலுக்குமே உரியது.
14-ஆம் நூற்றாண்டில் வடதிசை இஸ்லாமியப் படை யெடுப்பு தென்னக வடஎல்லையைத் தாக்கிய நாட்களில், அப்பகுதியில் அரசியல், சமுதாய, இனவாழ்வுகளுக்கே