பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

27

தென்னகத்தின் தேசீயச் சிற்பிகள் அவர்கள். தென்னகத்தின், புகழ் வீரர், சான்றோர் ஆகியோர் சிலைகளுக்கு ஒரு தேசீய மாடம் அமைக்கப்படுமாயின், அதில் அவர்கள் நடுநாயக இடமும், பேரிடமும் வகிக்கத்தக்கவர்கள் ஆவர்.

தென்னகத்தின்

வருங்காலத்தை வகுத்தமைக்கும் சிற்பிகளுக்கு இன்றியமையாத கருவி, கருவூலம் விசயநகர வரலாறு. வாழ்ந்த தென்னகத்தின் வாழ்வு காட்டி, அது வீழ்ந்த தென்னகமாகியதற்குரிய காரணங்கள், சூழ்நிலைகள், தேசீய வழுக்கள் ஆகியவற்றை எடுத்து விளக்க, அது மீண்டும் உயர்ந்தோங்கி உலகோம்புவதற்குரிய வழி துறைகளில், வகை முறைகளில் கருத்துச் செலுத்த இவ்வரலாற்றினும் சிறந்த துணைக்கலம் பிறிதில்லை. ஏனெனில் அது தேசீய வரலாறு மட்டுமன்று, தேசீய மலர்ச்சிக்குரிய வரலாறு ஆகும். அது மலர்ச்சியில் பிறந்து, மலர்ச்சியால் வளர்ந்து, மலர்ச்சியை ஊக்கியுள்ளது. அதுவே மலர்ச்சியின் மலர்ச்சியாக இன்றும் பொங்கல் வளம் வழங்க வல்லது ஆகும்.