32
அப்பாத்துரையம் – 13
கி.பி. 12-ம் நூற்றாண்டிலிருந்து 16-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை அடிமை (1193-1287), கில்ஜி (1210-1320), துக்ளக் (1320-1412), சயீத் (1412-1443), லோடி (1443-1526) ஆகிய ஐந்து ஆப்கானிய மரபினரும் அதன்பின் மூன்று நூற்றாண்டுகட்கு மேற்படப் பாபர் (1483-1530), ஹுமாயூன் (1526-1556), அக்பர் (1556- 1605), ஜெஹாங்கீர் (1605-1627), ஷாஜஹான் (1627-1658), ஒளரங்கசீப் (1658-1707) முதலிய முகலாயப் பேரரசரும் தில்லி நகரிலிருந்து ஆட்சி செய்தனர். இவர்களில் கில்ஜி, துக்ளக் மரபினரும், அக்பர் கால முதல் முகலாயப் பேரரசரும் வடதிசைச் சூறாவளியைத் தென்னக வாழ்வில் பரப்ப அரும்பாடுபட்ட பேரரசர் ஆவர்.
கில்ஜி அரசன் அலாவுதீன் காலத்துக்குள்ளாகவே தில்லியின் ஆட்சி சிந்து கங்கைவெளி முழுவதும் பரவி விட்டது. அலாவுதீன் தவிசேறு முன்பே அவன் தென்னகத்தின் அளப்பருஞ் செல்வம் பற்றியும் சிறப்பாகத் தேவகிரியாண்ட யாதவ மன்னன் இராம தேவன் பெருஞ் செல்வாக்கைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தான். முடி இளவரசனாகவும், மாகாணத் தலைவனாகவும் இருந்த நாளிலேயே தேவகிரிமீது பாய அவன் நேரம் பார்த்திருந்தான். தென்னகப் போட்டிகள் அவனுக்கு 1293- ஆம் ஆண்டிலேயே இதற்கோர் அரிய வாய்ப்பு வழங்கிற்று.
சூறாவளியின் சூழ்வரவு
ஆண்டு
தமிழகத்திலே இச்சமயம் சுந்தரபாண்டி வந்தான். அவனுக்கெதிராக வீர பாண்டியன் அரசுரிமைக் கொடியுயர்த்திப் போருக்குக் கிளம்பியிருந்தான். இப்பிளவைப் பயன்படுத்தி ஒய்சளப் பேரரசனான மூன்றாம் பல்லாளன் வீரபாண்டியனை ஆதரிக்கும் முறையில் பாண்டியன் மீது படையெடுத்துச் சென்றிருந்தான். ஒய்சளப் பேரரசைத் தாக்கக் கண்கொட்டாது வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த தேவகிரி மன்னன் இராமதேவன் இச்சமயம் பார்த்துத் தன் வீரப் புதல்வன் சங்கரதேவனை ஒரு பெரும் படையுடன் ஒய்சளர் தலைநகர் மீது ஏவினான். படைகளும் வீரப்படைத் தலைவனும் வெளியேறி யிருந்த இச்சமயம் தளரவிடாமல் அலாவுதீன் தேவகிரியைத் தாக்கி முற்றுகையிட்டான். இந்நிலையில் இராமதேவன் தோல்வியேற்க நேர்ந்தது. தோல்வியின் கடைசிக் கட்டத்தில்