பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

43

மதுரைக் கோயில் நிலவரம் பற்றித் தல வரலாறு சோகக் குரலெழுப்புகிறது.

‘சகம் 1246 முதல் 1293 வரை (கி.பி.1323-1370) நாற்பத் தெட்டு ஆண்டுகளாக இவ்வாட்சி நடைபெற்றுள்ளது. இந்நாட்களில் மதுரை கோயில் கொண்ட தெய்வமே மதுரையிலில்லை. அத்தெய்வம் நாஞ்சில் நாட்டுக்குச் சென்று பதுங்க வேண்டியதாயிற்று. ஐந்தெழுத்து வடிவான மதிலகமும் அதன் பதினான்கு கோபுர வாயில்களும் தவிடு பொடியாகி விட்டன. அழியாது எஞ்சியிருப்பது கருப்பமனையும் அரைமண்டபமும் மட்டுமே.

இக்கால இறுதிக்கு முன்னே விசயநகரப் பேரரசு வாழ்வு தொடங்கி விட்டது. அதன் வீரப் படைத்தலைவன் கம்பணனே இக்கால இறுதியில் தமிழகத்திலிருந்த வட திசையலையின் கடைசித் தூவானங்களை அகற்றினான். மதுரை வெற்றி (மதுராவிசயம்) என்ற பெயரால் அவன் வாழ்க்கை வரலாற்றை அவன் மனைவி, கங்கம்மா ஒரு சமஸ்கிருத காவியமாகப் பாடியுள்ளார். கவிதை மொழியில் இதே பாணியில் அவரும் அந்நாளைய சூழல்களை விவரித்துள்ளார்.

'கோயில் குளங்களெல்லாம் கவனிப்பாரற்றுப் போயின. அவற்றின் மதிலகங்களில் முரசு முழங்கவில்லை. நரிகள் ஊளையிடுகின்றன. நடை வரம்பறியாத துருக்கரைப் போலவே, காவேரிகூடக் கரைமீறிக் கொடுங் கோலாட்சியழிவுடன் சேர்ந்து அழிவு செய்கிறாள். மதுரை மாநகரடுத்த சோலை வனங்களெல்லாம் பெரும்பாலும் பாழ்வனங்களாய்விட்டன. ஆனால் கழு மரங்களிலே தொங்கவிடப்பட்டமாண்ட மக்களின் தலையோடுகள் எங்கும் காய்கள் முற்றித் தொங்கும் தென்னை மரங்களாகவே காட்சியளிக்கின்றன. தாமிரபரணியாற்றில் தண்ணீர் ஓடவில்லை; பசுக்களின் குருதியே கொதித்தோடுகிறது. வேதங்கள் மறக்கப்பட்டு விட்டன; நீதி ஒளிந்து கொண்டது. திராவிட மக்களின் பண்பையும் பெருமையையும் இப்போது எங்கும் காண முடியாது. அவர்களின் முகங்களிலெல்லாம் மாறாத சோகமே நிலையாகப் படிந்துவிட்டது போலிருக்கிறது'.

1327-இல் சீரங்கம் கோயில் சூறையாடப்பட்டது. மதுரைத் தெய்வம் நாஞ்சில் நாட்டில் அடைக்கலம் புகுந்தது போல,