பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

45

முற்பட்ட பழைய தென்னகத்தின் மாலை விண்மீன் ஒளியாகவும், புதிய பகலின் விடியற் போதுக்குக் கட்டியங்கூறும் காலை விண்மீன் ஒளியாகவும் ஒய்சளப் பேரரசு விளங்கிற்று.1326-இல் தமிழகத்தில் மதுரையிலும் சூழ்புறங்களிலும் படைத்தளமும் மாகாணத் தலைமையிடமும் அமைத்துவிட்டுப் பேரரசு பின் வாங்கியதும், ஓய்சளப் பேரரசன் மூன்றாம் பல்லாளன் புதிய செயல்களில் விரைந்தான். அவன் பெயரளவிலேயே தில்லிக்குப் பணிந்து கொடுத்திருந்தான். தலைநகர் சூறையாடப் பட்டுப் பெரும் பொருள் கொள்ளை போயிருந்தது. ஆனால் தலைநகரை அடிக்கடி திருவண்ணாமலைக்கும் ஹொச பட்டணத்துக்கும் மாற்றிக் கொண்டு தலை நகரில் எஞ்சியிருந்த வடதிசைப் புயலின் சிறு பிடியையும் வலுவிழக்கச் செய்தான். கீழ் கரையோரப் பகுதிகளைக் கைவசப்படுத்தி வடதிசை மைய ஆட்சியிலிருந்து மதுரையைத் துண்டுபடுத்துவதில் அவன் வெற்றி கண்டான்.

கொஞ்ச காலத்துக்கு ஒய்சள வெற்றியை மதுரை இஸ்லாமிய ஆட்சித் தலைவர்கள் தம் வெற்றியாகக் கொண்டு இறுமாந்தனர். வடதிசை மேலாட்சியை அவர்களே உதறித்தள்ளித் தனியாட்சி நிறுவினர். மதுரை சுல்தான்கள் என்ற பெயரும் சூட்டிக் கொண்டனர். இச்செயல்மூலம் தம் ஆட்சியின் வலுவைத் தாமே குறைத்துக் கொண்டதை அவர்கள் அறியவில்லை.

மதுரை இஸ்லாமிய ஆட்சியில் சுல்தான்கள் மக்களைச் சூறையாடுவதுடன் நிற்கவில்லை. நாட்டைக் குருதிக் காடாக ஆக்கியது போலவே, தம் அரசிருக்கையையும் குருதிப் பலிக்கள மாக்கினார். சதிகள், கொலைகள் மூலமே அரசிருக்கைக்கு ஒவ்வொருவரும் நீந்திவந்து ஆண்டு அல்லது மாதம், சிலசமயம் நாள் முடிவதற்குள் அதே சதி கொலைகளுக்கு ஆளாகி அதினின்றும் அகற்றி ஒதுக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் பல்லாளன் நடவடிக்கைகளில் மிகுதி கருத்துச் செலுத்த முடியவில்லை. ஆனால் இறுதியில் ஓய்சளருடன் அவர்கள் போராட்டம் முறுகிற்று.1341-இல் மதுரையை ஆண்ட அலாவுதீன் உதௌஜி திருவண்ணாமலை மீது படையெடுத்தான். இப்போரில் தற்செயலாக ஒரு கண்ணில் அம்பு பாய்ந்து அவன் மாண்டான். அடுத்த ஆண்டு பல்லாளன் ஒய்சளர் பழந்தலைநகரான