பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

அப்பாத்துரையம் – 13

கண்ணனூர்க் குப்பத்தை நெருக்கி முற்றுகையிட்டான். இதற்குள் மதுரையாட்சி இரு கைகள் மாறியிருந்தது. கொலைகாரச் சுல்தான்களிடையே கூடப் படுகொலை காரனென்று பெயரெடுத்த கியாசுதீன் தம் கானி பதவிக்கு வந்தபின் சதியால் பல்லாளனைக் கைப்பற்றி வதை செய்தான். அவன் உடலைத் துண்டுபடுத்தி மதுரை வாயிலிலேயே நிலையாகத் தொங்கவிட்டு, வட திசைப் புயலும் அஞ்சும் ஒரு கடும்புயற் சின்னமானான்.

ஒய்சளரின் இந்தத் தோல்வி உண்மையில் அடுத்தூர்ந்து வந்த தேசீய வெற்றிக்கு ஒரு படியாகவே அமைந்தது. ஏனெனில் ஒய்சளரின் தமிழக வெற்றிச் சுவடுகளைப் பின்பற்றி முழு விடுதலை காணவிருந்த விசயநகரப் பேரரசு இத்தோல்விக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்டிருந்தது!

தேசிய இயக்கத்தின் தாய்க்கொடி

தென்னகத் தேசியம் தமிழகத்தை மையமாகக் கொண்டு மறுமலர்ச்சி யுற்றது போல, 14-ஆம் நூற்றாண்டில் மலர்ந்த தென்னகத் தேசிய இயக்கமும் அதற்குமுன் ஆயிரம் ஆண்டு தமிழகத்தில் வளர்ந்து முதிர்ச்சியுற்ற பக்தி இயக்கத்தின் மறுமலர்ச்சியாகவே முகிழ்த்தது.

மேலையுலகில் பண்டைக் கிரேக்க உரோம வாழ்வின் புத்துயிர்ப்பாக எழுந்த ஐரோப்பியக் கலைமலர்ச்சியியக்கம் (Renaissance Movement) இதே 14-ஆம் நூற்றாண்டுக்குரியது என்பதுவும் இங்கே நினைவுகூரத்தக்கது.

தமிழகப் பக்தி இயக்கம் எப்போது தொடங்கிற்று என்று இன்றும் வரலாற்றாசிரியர்களால் முடிவுபடுத்திக் கூறப்பட வில்லை. ஆனால் சைவக் கிளைப்பேரியக்கத் தலைவர்களான நாயன்மார்களில் முதல் நாயன்மார்களும், வைணவக்கிளைப் பேரியக்கத் தலைவர்களான ஆழ்வார்களில் முதலாழ்வார்களும் வாழ்ந்த காலம் சங்க காலத்துக்கு நெடுந்தொலைவில் இருக்க முடியாது என்று திண்ணமாகக் கூறலாம். நடுநாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோர்களின் காலமாகிய 7-ஆம் நூற்றாண்டில் இயக்கம் உச்சநிலை அடைந்து, கி.பி.8-ஆம் நூற்றாண்டின் பின் அவ்வியக்கம் தமிழர் தேசிய வாழ்வின் ஒரு பகுதியாய்விட்டது. ஆனால் மணிமேகலை காலத்துக்கு முன்னிருந்தே தமிழக